ஜோதிடம்

சிவப்பு மண்டலத்தில் எவையெல்லாம் அனுமதிக்கப்படும்?? இவையெல்லாம் அனுமதிக்கப்படாது??….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

கொரோனா தாக்கத்தை பொறுத்து நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களை சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை மண்டலங்களாக மத்திய அரசு வகைப்படுத்தி அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக மாநில அரசுகள் அறிவிக்க உள்துறை செயலாளர் மாநில தலைமை செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதில் சிவப்பு மண்டலங்களில் எடுக்க வேண்டிய நடைமுறைகளை மாநில அரசுகள் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் உள்துறை செயலாளர் அந்த கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளார். 

இதன்படி சிவப்பு, ஆர​ஞ்சு மண்டலங்களை மாநில அரசுகள் அதிகரித்து கொள்ளலாம் என்றும், அதேநேரத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ளதை மாற்றக் கூடாது என்றும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. 

இந்தியா முழுவதும் 130 சிவப்பு மண்டலங்களை மத்திய சுகாதாரத்துறை அடையாளம் கண்டுள்ளது.

இந்த 130 சிவப்பு மண்டலத்திலும் ஊரடங்கை மத்திய அரசு நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இங்கு மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும்.

அனைத்து மெட்ரோ நகரங்களும் சிவப்பு மண்டலத்தில்தான் இருக்கின்றன. டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூர் மற்றும் அகமதாபாத் ஆகிய பெருநகரங்கள் இதில் வருகின்றன.

உத்தரபிரதேச மாநிலத்தில் தான் அதிகபட்சமாக 19 சிவப்பு மண்டலங்கள் உள்ளன. லக்னோ, ஆக்ரா உள்ளிட்ட பகுதிகள் இதில் அடங்கும். அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் மும்பை, புனே, நாசிக், நாக்பூர் உள்பட 14 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.

ALSO READ  மர்மங்கள் நிறைந்த குகை கோயில்...

அனுமதிக்கபட்டவை:-

சிவப்பு மண்டலத்தில் எந்தவொரு நடவடிக்கையும் அனுமதிக்கப்படாது.

வாகன போக்குவரத்திற்கு எந்தவித அனுமதியும் கிடையாது. 

அதேசமயம் முக்கிய காரணங்களுக்காக வாகன போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டாலும் நான்கு சக்கர வாகனத்தை பொருத்தவரை டிரைவர் மற்றும் உடன் பயணிப்பவர்கள் இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் இருசக்கர வாகனங்களில் அதில் பயணிக்க ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

மருந்துகள் மற்றும் மருத்துவத் துறை சார்ந்த பொருட்கள் மற்றும் கருவிகள் ஆகியவற்றை தயாரிக்கும் ஆலைகளுக்கு அவற்றை விற்பனை செய்யும் கடைகளுக்கும்  அனுமதி வழங்கப்படும்.

ஐடி துறை சம்பந்தமான வன்பொருட்கள்  (IT Hardwares) உற்பத்தி செய்வதற்கு அனுமதி.

அரசு அலுவலகங்களில் குறைந்த பணியாளர்களுடன் இயங்கலாம்.

வங்கிகள் சிறிய நிதி நிறுவனங்கள் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அவை என்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விவசாயம் சார்ந்த பயிரிடுதல் மற்றும் தோட்டம் ஆகிய அனைத்துவிதமான விவசாய சார்ந்த வேலை பார்க்கும் அனுமதி.

தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  செய்தி வாசிப்பாளர் உடையை வைத்து கிம் ஜோங் உன் உயிருடன் இருக்கிறாரா என தெரிந்து கொள்ளலாம்.. ஆச்சரிய தகவல்....

அத்தியாவசிய தேவைகள் சார்ந்த இ-காமர்ஸ் செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் சிறப்பு பொருளாதார மண்டலம் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் உங்கள் இந்த செல் டவுன்ஷிப் கள் ஆகியவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவை அனுமதிக்கப்படவில்லை:-

விமான போக்குவரத்து ரயில் போக்குவரத்து மெட்ரோ போக்குவரத்து பேருந்துகளில் உள்ளிட்ட எந்த விதமான போக்குவரத்திற்கும் அனுமதி கிடையாது.

பள்ளிகள் கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் கோச்சிங் சென்டரில் டியூஷன்  போன்றவற்றில் இருக்கும் அனுமதி கிடையாது.

திரையரங்குகள், மால்கள், ஜிம்கள், விளையாட்டு அரங்கங்கள் போன்றவற்றிற்கு அனுமதி கிடையாது.

வழிபாட்டுத் தலங்கள் எவற்றையும் திறப்பதற்கு அனுமதி இல்லை அதேசமயம்  மதம் சம்பந்தமான எந்தவித நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இல்லை.

பொதுமக்கள் ஒன்று கூடுவது முற்றிலுமாக தடை செய்யப்படும்.

தங்கும் விடுதிகள் உணவு விடுதிகள் போன்றவை இயங்குவதற்கு தடை.

தமிழ்நாட்டில் சிவப்பு மண்டலங்கள்:

1 – சென்னை

2 – மதுரை

3 – நாமக்கல்

4 – தஞ்சாவூர்

5 – செங்கல்பட்டு

6 – திருவள்ளூர்

7 – திருப்பூர்

8 – ராணிப்பேட்டை

9 – விருதுநகர்

10 – திருவாரூர்

11 – வேலூர்

12 – காஞ்சிபுரம்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திரு அத்யயன உற்சவம் வைகுண்ட ஏகாதசி இராபத்து முதல் நாள் நம்பெருமாள் ரத்னாங்கி சேவை

Admin

மோடி – சீன அதிபரை வரவேற்று தமிழக அரசு சார்பில் பேனர் வைக்கலாம்

Admin

மனித சிறுநீரைக் கொண்டு நிலவில் தயாராகும் கான்கிரீட்…

naveen santhakumar