இந்தியா

பெண் சிங்கத்தின் கர்ஜனைக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்வாங்கிய ஆண் சிங்கம்… வைரலாகும் காட்சி!!… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கிர்:-

குஜாராத் மாநிலம் கிர் தேசிய பூங்காவில் ஆண் சிங்கமும் பெண் சிங்கமும் ஒன்றுக்குகொன்று சண்டையிட்ட போது பெண் சிங்கத்தின் கர்ஜனைக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆண் சிங்கம் பின்வாங்கிய காட்சி தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. 

காட்டிற்கே ராஜாவாக கருதப்படும் சிங்கங்கள் மற்ற விலங்குகளை வேட்டையாடுவதையும் அதனுடன் சண்டையிடும் காட்சிகளையும் நாம் பார்த்திருப்போம். ஆனால் ஆண் சிங்கம் ஒன்று பெண் சிங்கத்துடன் சண்டையிடும் பொழுது பெண் சிங்கத்தின் கர்ஜனை ஈடுகொடுக்க முடியாமல் பின்வாங்கிய காட்சியில் நீங்கள் கண்டிருக்கிறீர்களா??

courtesy.

அப்படி ஒரு சம்பவம் குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவில் நடைபெற்றுள்ளது.  கிர் தேசிய பூங்கா கம்பீரமான ஆசிய சிங்கங்களின் (Majestic Asiatic lions) ஒரே புகழ் இடமாகும். இந்த ஆசிய சிங்கங்களை காண்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் வருகை தருகின்றனர். 

அவ்வாறு அங்கு சென்ற வனவிலங்கு புகைப்படக் கலைஞரும், பிஜேபி கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகருமான ஜூபின் ஆஷாரா (Zubin Ashara) சிங்கங்கள் சண்டையிடும் இந்த அரிய காட்சியை படமாக்கியுள்ளார். 

ALSO READ  கொரோனாவால் சிங்கம் உயிரிழப்பு..!

22 வினாடிகள் உள்ள இந்த வீடியோவில் சாலையின் குறுக்கே ஆண் சிங்கமும் பெண் சிங்கமும் ஒன்றுடன் ஒன்று சண்டையிடும் காட்சிகள் காட்டுகின்றன. அதில் அளவில் பெரியதாகவும் அரசனாகவும் விளங்கும் ஆண் சிங்கம், பெண் சிங்கத்தின் கர்ஜனைக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்வாங்குவதும் காட்சி பதிவாகியுள்ளது. 

ALSO READ  புதிய அணை கட்டுவது உறுதி - தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாது: எடியூரப்பா

இந்த அரிய காட்சி Wild India ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது:-

இந்த சண்டையை பார்த்து சிலர் வியப்படைந்திருந்தாலும், பலர் இது தினம்தோறும் வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே  நடக்கும் சண்டையை ஒத்துள்ளது என கிண்டலாக கமெண்ட் செய்துள்ளனர். 

ஒரு காலகட்டத்தில் வேட்டையாடுதல், நோய்த்தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் அழிவின் விழும்பில் இருந்த ஆசிய சிங்கங்கள் தற்போது மத்திய மாநில அரசுகள் எடுத்துவரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக கனிசமான உயர்ந்து வருகின்றன. இந்த ஆண்டு கணக்கெடுப்பின்படி கிர் தேசிய பூங்காவில் 674 சிங்கங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஏவுகணை நாயகன் குறித்து நடிகர் கமலஹாசனின் ட்விட்டர் பதிவு:

naveen santhakumar

இன்று முதல் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கொரோனா தடுப்பூசி !

News Editor

கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாநிலமானது திரிபுரா…

naveen santhakumar