அரசியல்

போலீசார் அனுமதி மறுத்ததால் ஸ்கூட்டரில் சென்ற பிரியங்கா காந்தி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோ நகரிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.ஆர். தாராபுரி (76) கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கைது செய்யப்பட்ட தாராபுரியின் குடும்ப உறுப்பினர்களை சந்திக்க காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி இன்று அங்கு புறப்பட்டுச் சென்றார். ஆனால், மாநில போலீசார் பிரியங்கா காந்தியை வழியிலேயே தடுத்து நிறுத்தினர்.

ALSO READ  சிங்காநல்லூர் தொகுதியில் ம.நீ.ம. வேட்பாளர் மகேந்திரன் தீவீர வாக்கு சேகரிப்பு !
உ.பி.யில் பரபரப்பு - போலீசார் அனுமதி மறுத்ததால் ஸ்கூட்டரில்  சென்ற பிரியங்கா காந்தி

இதையடுத்து, பிரியங்கா காந்தி காரில் இருந்து இறங்கி ஸ்கூட்டரின் பின்புறத்தில் ஏறி அமர்ந்தபடி சென்றார். தாராபுரி குடும்ப உறுப்பினர்களை சந்தித்துப் பேசினார்.
போலீசார் அனுமதி மறுத்ததால் ஸ்கூட்டரில் சென்று ஐபிஎஸ் அதிகாரியின் குடும்ப உறுப்பினர்களை பிரியங்கா காந்தி சந்தித்தது உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ராஜேந்திர பாலாஜி தலைமறைவு… தங்கை மகன்களிடம் தீவிர விசாரணை!

naveen santhakumar

குடியரசு தின அலங்கார ஊர்தி…. முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!

naveen santhakumar