சினிமா

விஜய்சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தமிழை தவிர தெலுங்கு. மலையாளம், ஹிந்தி போன்ற மற்ற மொழியிலும் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில்  நடிகர் விஜய் சேதுபதி தற்போது இந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ‘அந்தாதூன்’ திரைப்படம் கடந்த 2018 ஆண்டு இந்தியில் வெளியானது. அந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர்கள் நடித்திருந்தனர். இதனை இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கிருந்தார். அந்தாதூன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது, ரூ 40 கோடிக்கு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரூ 450 வசூல் செய்தது. அதனை தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது.    

இந்நிலையில் ‘அந்தாதுன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்றும் அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடிக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி வருகின்றன. விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

ALSO READ  பொள்ளாச்சி வழக்கு; "200 பெண்களின் அலறல் ஓயவில்லை"...கமலஹாசன் கருத்து! 

#vijaysethupathi #katrinakaif #hindicinema #tamilthisai  


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தென்னிந்திய சினிமா துறையிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் : பாலிவுட் நடிகர் புகழாரம் 

News Editor

ராகவா லாரன்ஸ் படத்தில் மீண்டும் இணையும் பிரபல நடிகர்..!

News Editor

சத்குருவுடன் சமந்தா ஆன்மிக சந்திப்பு !

News Editor