இந்தியா

கருப்பு,வெள்ளை,மஞ்சளை தொடர்ந்து பச்சை பூஞ்சை :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்திய பிரதேசம் :

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலையில் தீவிர பாதிப்புகள் ஏற்பட்டது. அதன் விளைவாக இணை நோய்களும் வர தொடங்கின. அதில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு அதிகமாக ஏற்பட தொடங்கியது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இந்த தொற்று எளிதில் பரவியது. ஆம்போடெரிசின் என்ற மருந்து இதற்கான சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டது. இதன் தொடர்ந்து ஒரு சிலருக்கு வெள்ளை பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இது கருப்பு பூஞ்சை நோய் ஏற்படுத்தும் பாதிப்புகளை விட அதிக ஆபத்து நிறைந்தது என மருத்துவர்களால் கூறப்பட்டது. பின்னர் மஞ்சள் பூஞ்சை நோய் பாதிப்பும் கண்டறியப்பட்டது. முக்கியமாக இணைநோய்களான சர்க்கரை, இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் உள்ளவர்களேயே இந்த பூஞ்சை நோய் தாக்குகிறது.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் அரவிந்தோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 34 வயதுடைய விஷால் என்பவருக்கு ‘பச்சை பூஞ்சை’ நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த ஒன்றரை மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு 90 சதவீத நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. காய்ச்சலும் குறையவில்லை அதனால் ஸ்ரீ அரவிந்தோ மருத்துவ அறிவியல் கழகத்தின்தலைவர் டாக்டர் ரவி தோசி சந்தேகத்தின் பேரில் கருப்பு பூஞ்சை சோதனை செய்துள்ளார். அவருக்கு நடந்த அந்த பரிசோதனையில், பச்சை பூஞ்சை நோய் இருப்பது தெரிய வந்துள்ளது.

ALSO READ  பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத பெற்றோர் செத்துப் போய் விடுங்கள்-
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

இது கருப்பு பூஞ்சை நோயில் இருந்து இது முற்றிலும் வேறுபட்டது. இதனை, இந்தூர் நகர சுகாதார துறையின் மாவட்ட தரவு மேலாளர் அபூர்வா திவாரி உறுதி செய்துள்ளார். நாட்டில் முதன்முறையாக இந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Software de apostas desportivas Descarregar aplicação cliente 1xbet co

Shobika

வங்கிகளில் NEFT,RTGS,IMPS.. என்ன வித்தியாசம் தெரியுமா?

News Editor

Mostbet AZ-90 kazino azerbaycan Ən yaxşı bukmeyker rəsmi say

Shobika