அரசியல் இந்தியா

மோடி குறித்த அவதூறு பேச்சு – ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசியதற்காக ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு உடனடி பிணையும் வழங்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் குஜராத் பாஜக எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தார். இந்நிலையில் மோடி பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசிய வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என குஜராத் சூரத் நீதிமன்றம் அறிவித்து ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு உடனடி பிணையும் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த தீர்ப்பு தொடர்பாக ராகுல்காந்தி, தனது தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி பின்னர் அடுத்தகட்ட முடிவுகளை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வழக்கையே தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் காங்கிரஸ் தரப்பில் வழக்கு தொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Share
ALSO READ  காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து? பிரதமர் மோடி ஆலோசனை …!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Индикатор OsMA Скользящая Средняя Осциллятора Опережающий Индикатор

Shobika

ஆசிரியர்கள் பள்ளிக்குள் நுழைய அனுமதியில்லை

naveen santhakumar

“டூர் ஆப் டியூட்டி” திட்டத்தில் 3 ஆண்டு பணியாற்றியவர்களுக்கு தனது நிறுவனத்தில் வாய்ப்பளிக்கும் ஆனந்த் மஹிந்திரா

naveen santhakumar