சினிமா

வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஹெச்.வினோத். இவர் அஜித்தை வைத்து எடுத்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி, பலரது பாராட்டுக்களை பெற்றது. இதையடுத்து மீண்டும் இணையும் படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டுள்ளது. ஶ்ரீதேவியின் கணவரான போனி கபூர் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். வலிமை படத்தின் ஷூட்டிங் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

ALSO READ  பிக்பாஸ்ஸில் நடிகை ப்ரியா பவானிசங்கர்?

இந்நிலையில் வலிமை படம் நவம்பர் 12-ஆம் தேதி வெளியாக போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு இத்திரைப்படத்தை வெளியிட திட்டமிருந்ததாகவும், தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக, 12-ஆம் தேதி அன்று படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அஜித் நடித்த வலிமை திரைப்படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படுவது அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பிலும் அதிக அளவு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“சிலுக்கருப்பட்டி போல இது ஒரு அச்சுவெல்லம்” பாராட்டிய தள்ளிய சேரன் !

News Editor

பிரபல இந்தி இயக்குநருடன் கைகோர்க்கும் அனிருத் ! 

News Editor

Youtube ட்ரெண்டிங்கில் ‘ஜெய் சுல்தான்’ பாடல்..! 

News Editor