சினிமா

காட்டேரி பட தயாரிப்பாளரை கண்டித்த திருப்பூர் சுப்பிரமணியம்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர் டிகே தமிழில் “யாமிருக்க பயமேன், கவலை வேண்டாம் படங்களை இயக்கியள்ளார். அவர் இயக்கிய இருபடங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது “காட்டேரி” என்ற ஒரு புதிய படத்தினை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக வைபவ் நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்திருக்கிறார்.

அதனையடுத்து படத்தின் முக்கய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார், கருணாகரன், சோனம் பாஜ்வா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தினை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

“காட்டேரி” படத்தின் அணைத்து பணிகளுமே முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருந்த நிலையில்  கொரோனா நெருக்கடி காரணமாக  திட்டமிட்டபடி படத்தை திரையரங்கில் வெளியிட முடியவில்லை. ஆகையால் படம் ஓடிடியில் வெளியாகும் என எதிர் பார்க்கப்பட்டது.


அதனை தொடர்ந்து  பல ஓடிடி தளங்களில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் பேச்சு வார்த்தையில் இதுவரை உடன்பாடு எட்டாததால்,  காட்டேரி படத்தினை திரையரங்கில்வரும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று  வெளியிடுவதாக ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அறிவித்திருந்தது. அண்மையில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் காட்டேரி படம் கொரோனா இரண்டாம் அலை உருவாகியுள்ளதால் படம் வரும் டிசம்பர் 25 ம் தேதி வெளியாகாது, என்றும்  படத்தின் வெளியீட்டை படக்குழு தள்ளி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 
இதனைதொடரந்து  ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட இவ்வறிக்கை குறித்து, திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், ” ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வருத்தமளிக்கிறது. படம் வெளியிடுவது, வெளியிடாமல் இருப்பது எல்லாம் அவர்களுடைய விருப்பம்.

ALSO READ  பச்சை நிறமே.. பச்சை நிறமே.. சஞ்சிதா ஷெட்டியின் ஹாட் புகைப்படங்கள்

எங்களுடைய சொந்தக் காரணங்களுக்காக வெளியிடவில்லை எனக் கூறியிருக்கலாம். அதைவிட்டுவிட்டு கரோனா இரண்டாம் அலை என்று தேவையில்லாத வதந்தியைப் பரப்புவது மிகவும் கவலையளிக்கிறது. மத்திய அரசின் சுகாதாரத் துறைக் குழுவினர் நேற்றைய முன்தினம் நடத்திய கூட்டத்தில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பிலும் கலந்துகொண்டார்கள்.

ALSO READ  நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை; அச்சத்தில் புதுச்சேரி மக்கள்!

அதில் கரோனாவின் 2-வது அலை இந்தியாவில் பரவ வாய்ப்பில்லை என்று மத்திய அரசு கூறியது. நேற்றைய தினம் வெளியான ‘வொண்டர் வுமன்’ படத்துக்கு என்ன வரவேற்பு இருந்தது என்பது இவர்களுக்குத் தெரியாது. திருப்பூரில் உள்ள எனது திரையரங்கில் ‘வொண்டர் வுமன்’ திரைப்படம் 2 காட்சிகள் திரையிடப்பட்டதில் 811 பேர் வந்து படம் பார்த்துள்ளனர். படத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இப்போதுதான் திரையரங்கிற்கு மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். தயவுசெய்து இத்தகைய செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனப் பேசியுள்ளார்.   


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

செல்வராகவன் குறித்து சாணிக் காயிதம் படத்தின் இயக்குநர் கருத்து !

News Editor

‘ஐ லவ் யூ மாமா’ என சர்ச்சையில் சிக்கிய நிதி அகர்வால்..!

News Editor

ட்வீட் செய்த ஷ்ரேயா கோஷல்; குவியும் வாழ்த்துக்கள் !

News Editor