இந்தியா உலகம்

ஒடிசா வெள்ளப்பெருக்கு – ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பு..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஒடிசாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்கனமழை காரணமாக மகாநதி ஆற்றுநீர் அமைப்பில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மாநிலத்தின் வடக்கு பகுதியில் கனமழை பெய்து வருவதனால் ஒடிசாவில் ஓடும் முக்கியமான ஆறுகளில் அபாய அளவை கடந்து தண்ணீர் செல்கிறது. குறிப்பாக சபர்நரேகா ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் கரையோர பகுதிகளான பாலாசோர், மயூர்ப்கஞ்ச் மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

இதைப்போல ஜாஜ்பூர் மாவட்டத்தில் பைத்தரானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் தஸ்ரத்பர், கோரை உள்ளிட்ட பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பாலாசோர் மாவட்டத்தில் மட்டும் 156 கிராமங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக ஒடிசா மாநில அமைச்சர் துகுனி சாகு தெரிவித்துள்ளார். மேலும் இந்த பகுதிகளில் வசித்து வரும் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் 227 தற்காலிக மையங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

ALSO READ  தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு :

இந்நிலையில் பாலாசோர், மயூர்பஞ்ச், ஜாஜ்பூர் மற்றும் பத்ரக் மாவட்டங்களில் உள்ள 251 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை 9.66 லட்சத்தைத் தாண்டியுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Parimatch On Line Casino Polska Bonus +100% Za Pierwszy Depozyt

Shobika

மீண்டும் WWE வந்தார் Edge : 90s kidsகள் உற்சாகம்

Admin

இந்தோனேசிய நாட்டில் கடுமையான நிலநடுக்கம்….

Shobika