இந்தியா

தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள்; காணொலி மூலம் திறந்துவைத்த பிரதமர்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களான அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் தலா ஒரு மருத்துவக்கல்லூரி வீதம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது நிறைவடைந்துள்ளது.

முதலில் இதனை வரும் 12ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி விருதுநகர் மாவட்டத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை நேரடியாக வந்து தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலைக் கருத்தில் கொண்டு பிரதமர் 11 கல்லூரிகளையும் காணொலி காட்சி வாயிலாக திறந்துவைப்பார் என பிரதமர் அலுவலகம் அறிவித்திருந்தது.

ALSO READ  இந்திய வான் எல்லைக்குள் ரஃபேல் போர் விமானங்கள் வருகை… 

அதன்படி, இன்று மாலை 4 மணிக்கு, டெல்லியில் இருந்தபடி பிரதமர் நரேந்திரமோடி, தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 புதிய மருத்துவக்கல்லூரி கட்டிடங்களையும் காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தார். மேலும், மத்திய அரசு நிறுவனமான செம்மொழி தமிழ் ஆராய்ச்சி மைய வளாக கட்டிடத்தையும் அவர் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்தபடி காணொலிக்காட்சி மூலம் பங்கேற்றார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Mostbet AZ-90 kazino azerbaycan Ən yaxşı bukmeyker rəsmi sayt

Shobika

“المراهنات الرياضية أونلاين 1xbet ᐉ شركة المراهنات 1xbet تسجيل الدخول ᐉ 1xbet Co

Shobika

Mostbet AZ-90 kazino azerbaycan Ən yaxşı bukmeyker rəsmi sayt

Shobika