இந்தியா

இந்திய வான் எல்லைக்குள் ரஃபேல் போர் விமானங்கள் வருகை… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அம்பாலா:-

‘Game Changer’ ரஃபேல் விமானங்களை இந்திய போர் விமானங்கள் வரவேற்று  இந்திய எல்லைக்குள் அழைத்து வந்தன.

சுகோய் 30எம்கேஐ விமானங்கள் ரஃபேல் விமானங்களை வரவேற்று ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்தை நோக்கி செல்லும் வீடியோ காட்சிகள்.

#WATCH: Five #Rafale jets in the Indian airspace, flanked by two Su-30MKIs (Source: Raksha Mantri's Office)

Posted by Asian News International (ANI) on Wednesday, July 29, 2020
courtesy.

கடந்த திங்கட்கிழமை பிரான்ஸ் நாட்டின் துறைமுக நகரான போர்டாக்ஸ் (Bordeaux)ன் மெரினேக் (Merignac) விமானப்படை தளத்திலிருந்து ரஃபேல் விமானங்கள் புறப்பட்டது வழியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் தஃரா விமானப்படை தளத்தில் கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் ஓய்வு எடுத்தனர். 

பின்னர் அங்கிருந்து கிளம்பி மேலும் பணியில் 30 ஆயிரம் அடி உயரத்தில் பிரெஞ்சு விமானப்படைக்கு சொந்தமான டைங்கர் விமானத்திலிருந்து  வானில் பறந்தபடியே ரஃபேல் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது.

ALSO READ  Azərbaycanın ən yaxşı bukmeker kontor

முன்னதாக இந்திய எல்லைக்குள் வருகைதந்த ரஃபேல் போர் விமானங்கள் அரபிக் கடலில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஐஎன்எஸ் கொல்கத்தா போர்க்கப்பல் உடன் இணைப்பை ஏற்படுத்திய ஆடியோ பதிவு.

ரஃபேல் விமானத்தின் சிறப்பம்சங்கள்:-

ரஃபேல் விமானங்கள் எதிரி நாட்டின் ரேடாருக்கு புலப்படாது.

ஹெல்மெட் மவுன்டட் லைட், ரேடார் எச்சரிக்கை கருவிகள், பறத்தல் தொடர்பான விவரங்களை 10 மணி நேரம் வரை சேமிக்கும் வசதி உள்ளது.

ஜாம்மர்கள், இன்ஃப்ரா ரெட் டிராக் சிஸ்டம்ஸ், கோல்டு எஞ்சின் ஸ்டார்ட் வசதி உள்ளது.

ALSO READ  ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?? நாளை முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..

பிரான்ஸ், எகிப்து, கத்தார் ஆகியவற்றை தொடர்ந்து ரஃபேலை வைத்துள்ள 4 ஆவது நாடு இந்தியா ஆகும்.

ரஃபேலில் உள்ள ஏவுகனை மூலம் 150கிமீ தொலைவில் உள்ள விமானங்களையும் அழிக்க முடியும்.

ரஃபேல் போர் விமானங்கள் பறக்கம் கம்ப்யூட்டர் என்று வர்ணிக்கப்படுகின்றன.

ரஃபேல் போர் விமானங்கள் மூலம் அணு ஆயுதங்களை செலுத்தி எதிரிகளை எளிதாக வீழ்த்த முடியும்.

வானத்தில் இருந்து தரையில் இருக்கும் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்க கூடியவை.

உலகின் மிகச்சிறந்த உளவு விமானங்களில் ஒன்றாகவும் ரஃபேல் கருதப்படுகிறது.

நிலையான இலக்கு மட்டும் அல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கும் இலக்கையும் ரஃபேலால் துல்லியமாக தாக்க முடியும்.

சீனாவின் சுகோய் 35s போர் விமானங்களை விட ரஃபேல் விமானங்களில் கூடுதலாக ஆயுதங்களை இருப்பு வைக்க முடியும்.

மணிக்கு 1000 கிமீ வேகத்தில் ரஃபேல் விமானங்களால் மிக எளிதாக பறக்க முடியும். அதிகபட்சமாக மணிக்கு 2223 கிலோமீட்டர் வேகம் வரை எட்டும் திறன் கொண்டவை.

ரஃபேல் விமானங்கள் 9500 கிலோகிராம் எடை வரை உள்ள ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டவை.

ரஃபேல் போர் விமானங்கள் அம்பாலா விமானப்படை தளத்திற்கு வருகை தருவதை ஒட்டி அதை சுற்றியுள்ள கிராமங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வீட்டின் மாடிகளிலிருந்து ரஃபேல் விமானங்களை புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஓ.பி.சி பட்டியலில் திருநங்கைகள் -மத்திய அரசு முடிவு..!

Admin

உலக சாதனை படைத்த தூர்தர்ஷன் இராமாயணம் மெகா தொடர்….

naveen santhakumar

Mostbet Indian: Official Site, Enrollment, Bonus 25000 Logi

Shobika