இந்தியா விளையாட்டு

ரூ.50 லட்சம் மதிப்புடைய அரிசி மூட்டைகளை அளிக்கும் கங்குலி.. பி.வி.சிந்து 10 லட்சம்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவால் அனைத்து மாநிலங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சமானிய மக்கள், கூலித்தொழிலாளர்கள், ஏழைகள் நிலை கவலைக்குள்ளாகி இருக்கிறது.

மேற்குவங்கத்தில் வீடுகள் இல்லாத மக்கள் அரசு பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்புடைய அரிசி மூட்டைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (BCCI) தலைவர் சவுரவ் கங்குலி நன்கொடையாக அளிக்கவுள்ளார்.

ALSO READ  "கோ கொரோனா, நோ கொரோனா" வேடிக்கையாக பேசிய அமைச்சர்..! வேதனையில் மக்கள்..!

இதனை தனியார் நிறுவன மூலம் நன்கொடையாக கங்குலி அளிக்க இருப்பதாக மேற்குவங்க மாநில கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதேபோல் பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் அவிஷேக் டால்மியா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார் .

ALSO READ  உச்சகட்டம்… இந்த மாநிலத்தை உலுக்கி எடுக்கும் கொரோனா!

இதேபோல பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவும் ஆந்திரா, தெலுங்கானாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இதுகுறித்து பி.வி.சிந்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:-

தெலங்கானா, ஆந்திர மாநிலங்கள் கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடி வரும் நிலையில் மக்களுக்கு உதவுவதற்காக இரு மாநிலங்களின் முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினேன் எனத் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்திய பொருளாதாரத்தின் கருப்பு நாள்! ட்விட்டரில் ட்ரெண்டிங்

naveen santhakumar

பொது விடுமுறையில் திடீர் மாற்றம்… முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையால் அவசர உத்தரவு!

naveen santhakumar

கொரோனா: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை ஐஸ்வர்யாராய், மகள் ஆரத்யா வீடு திரும்பினர்…

naveen santhakumar