உலகம்

உருவகேலியால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வளர்ச்சின்மையால் பள்ளியில் சக மாணவர்கள் கிண்டல் செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளான சிறுவன் குவாடனுக்கு மிகப்பெரிய கௌரவம் கிடைத்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் வைரலாக பரவிய சிறுவனின் அழுகை வீடியோவை இந்த உலகம் அவ்வளவு எளிதில் மறந்திருக்காது. பிறப்பிலேயே அரிய நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவன் போதிய வளர்ச்சி இன்றி பள்ளியில் சக மாணவர்கள் கிண்டல் செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளானான்.

அந்த மன உளைச்சலில், தான் செத்துப் போகப் போவதாக அவன் கதறி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த வீடியோவை பதிவு செய்த அவரது தாயார் இதுபோன்ற ‘குறைபாடு உள்ள குழந்தைகளை கிண்டல் செய்து அவர்களை காயப்படுத்தாதீர்கள்’ என வேண்டுகோள் விடுத்தார்.

ALSO READ  ஆற்றில் மீன் பிடிக்க 10 ஆண்டுகள் தடை: அதிர்ச்சி அளிக்கும் சீனா

இதனை தொடர்ந்து சிறுவனுக்கு உலகம் முழுவதும் ஆதரவு கரங்கள் நீண்டன பல சினிமா நட்சத்திரங்கள் அவனுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர் மேலும் சிறுவனைப் போல வளர்ச்சியின்மையால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர் பிராட் வில்லியம்ஸ் சிறுவனுக்காக ட்விட்டர் மூலம் நிதி திரட்டினார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற ரக்பி சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டியை துவக்கி வைக்கும் கவுரவம் சிறுவனுக்கு வழங்கப்பட்டது. உள்ளூர் ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியில் பந்துடன் மைதானத்துக்குள் நுழைந்த சிறுவனின் வருகையை திரண்டிருந்த ஆயிரக்கணக்கான கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இந்த சம்பவம் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளதாக அவரது தாயார் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்கள் வைரலாகி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“2025 வரை கம்மியா சாப்பிடுங்க மக்களே!” – அதிபரின் கொடுமையான அட்வைஸ்!

naveen santhakumar

கொரோனா வைரஸ் அறிகுறிகளை மறைத்தால் 6 மாதம் சிறை…..

naveen santhakumar

குழந்தை பெற்றுக்கொள்ள முயன்ற தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி

Admin