இந்தியா

ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு-பிரதமரை சந்திக்க மகாராஷ்டிர அரசு முடிவு…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஒடிசா, பீகார் ஆகிய மாநிலங்கள் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

இதையடுத்து மூன்றாவது மாநிலமாக மகாராஷ்டிரவும் அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது.

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும். இதன்படி 2021 நடைபெற உள்ளது. இந்த 2021க்கான சென்ஸஸில் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்க்க வேண்டும் என மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் கடந்த ஜனவரி 8ஆம் தேதி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ALSO READ  Официальный сайт MostBet Uz для Узбекистан

ஆனால் அதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில், இத்தீர்மானத்தை ஏற்காவிட்டால் மாநிலமே ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என சரத் பவாரின் கட்சி அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், இது குறித்து கூறிய துணை முதல்வர் அஜித் பவார்:-

முதலமைச்சர் உத்தவ் தாக்ரே தலைமையில் ஒரு குழு பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று கூறியுள்ளார்.

ALSO READ  Mostbet AZ 90 kazino azerbaycan Ən yaxşı bukmeyker rəsmi sayt

கடந்த 1931ம் ஆண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள்தொகை அதிகரித்துள்ளது.

ஆனால், இவர்களுக்கான இட ஒதுக்கீட்டு வரம்பு தற்போது வரை 50% உள்ளது. இது தொடர்பான விவரங்களை 1931ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் இருந்து மட்டுமே பெற முடியும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

1xbet 보너스 첫 입금 시 1xbet 보너스 받기보너스 1xbet Co

Shobika

Пин Ап казино официальный сайт Pin Up Вход, регистрация, зеркал

Shobika

Играйте В мои Любимые Слот

Shobika