உலகம்

மலேஷியாவின் புதிய பிரதமராக முஹ்யித்தீன் யாசின் தேர்வு…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கோலாலம்பூர்:-

மஹாதிர் முகம்மது மீண்டும் மலேஷிய பிரதமர் ஆவார் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் புதிய பிரதமராக முஹ்யித்தீன் யாசினை (Muhyiddin Yassin) அந்தநாட்டு அரசர் நியமித்துள்ளார்.

King Abdullah of Pahang

முஹ்யித்தீன் யாசின், மஹாதிர் முகம்மதுவின் பெர்சாட்டு கட்சியின் (Bersatu Party) தலைவராக தற்போது உள்ளார்.

மலேஷிய தேசிய கூட்டணி-ல் (2018 தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி) ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து கடந்த திங்களன்று பிரதமர் பதவியை மஹாதிர் முகம்மது ராஜினாமா செய்தார். 

இவரின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த முஹ்யித்தீன் யாசின் (72) நாளை (ஞாயிற்று கிழமை) பிரதமராக பதவி ஏற்பார் என கோலாலம்பூர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ALSO READ  பாகிஸ்தான் விமானங்கள் தங்கள் வான் பகுதியில் பறப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை... 

தனது நீண்ட கால அரசியல் எதிரியான அன்வர் இப்ராகஹிமுடன் சேர்ந்து மீண்டும் பிரதமர் பதவியை பிடிக்க மஹாதிர் முகம்மது முயற்சித்தார். 

ஆனால் பெரும்பாலான கூட்டணி கட்சிகள் முஹ்யித்தீன் யாசினுக்கு மட்டுமே தங்களது ஆதரவை தெரிவித்ததை அடுத்து அவருக்கு பிரதமர் பதவி கிடைத்துள்ளது.

ALSO READ  மோசடி புகழ் நிரவ் மோடிக்கு காவல் நீட்டிப்பு:

முஹ்யித்தீன் யாசின் இதற்கு முன்னர் நஜீப் ரஸாக் தலைமையிலான அரசில் துணை பிரதமாராக இருந்தார். இந்த நஜீப் ரஸாக் 2018-ம் ஆண்டு தேர்தலில் மஹாதீரிடம் தோல்வியுற்றது குறிப்பிடதக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு கிடைத்த எதிர்பாராத பாராட்டு….

naveen santhakumar

47 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த காதல் மோதிரம் …

Admin