இந்தியா தொழில்நுட்பம்

பிரசவத்திற்கு முதல்நாளில் கொரோனாவை கண்டறியும் கருவியை கண்டுபிடித்த பெண்மணி…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புனே:-

புனேவைச் சேர்ந்த MyLab என்ற நிறுவனம் கோவிட் 19 வைரஸை கண்டறியும் கருவிகளை உருவாக்கியுள்ளது. இதன் இந்தியா கொரோனா பரிசோதனைக்காக முதன் முறையாக சொந்தமாக உருவாக்கியுள்ள பரிசோதனைக் கருவி ஆகும். 

இந்த நிறுவனம் தனது 150 பரிசோதனை கருவிகளை புனே, மும்பை, டெல்லி, கோவா பெங்களூரு ஆகிய நகரங்களில் உள்ள பரிசோதனை மையங்களுக்கு அனுப்பியுள்ளது.

இந்த கருவி உருவாக்கப்பட்டதன் பின்னணியில் பெண்மணி ஒருவர் தலைமை தாங்கியுள்ளார் அவரது பெயர் மினல் தஹாவே போஸலே (Minal Dakhave Bhosale).

கர்ப்பிணியான இவர் தனது பெண் குழந்தையைப் பிரசவிப்பதற்கு முதல் நாள் இந்த கருவியை உருவாக்கியுள்ளார்.

இதுகுறித்து மினல் தஹாவே கூறுகையில்:-

நமது நாடு இருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், இது எங்கள்  முன் வைக்கப்பட்ட சவால். எனவே எங்கள் குழுவினர் 10 நாட்களாக மிகக் கடினமாக உழைத்து இதை சாதித்துக் காட்டி உள்ளோம்.

ALSO READ  டிஜிட்டல் முறையில் சார்ஜிங்.புனே ரயில் நிலையத்தில் அறிமுகம்..

தற்போது, வெளிநாட்டிலிருந்து வாங்கப்பட்ட பரிசோதனைக் கருவிகள் மூலம் மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கு 6 மணிநேரம் முதல் 7 மணி நேரம் வரை ஆகிறது. ஆனால் நாங்கள் உருவாக்கியுள்ள இந்த கருவியின் மூலம் இரண்டரை மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகளை பெற முடியும் என்றார்.

இவர் கண்டுபிடித்த இந்த கருவியை கடந்த மார்ச் 18 தேசிய வைராலஜி மையத்தில் (National Institute of Virology) சமர்ப்பித்தார் அதாவது இவரது பிரசவத்திற்கு முதல்நாள்.

இதுவரை, இந்தியா வெளிநாடுகளிலிருந்து வாங்கும் கருவி ஒன்றின் விலை 4,500 ரூபாய் தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள இந்த MyLab நிறுவன Patho Detect கருவியின் விலை 1200 ரூபாய். மேலும், இதன் மூலம் ஒரே நேரத்தில் 100 மாதிரிகளை பரிசோதிக்க முடியும்.

ALSO READ  ஓராண்டுக்கு எந்தவித புதிய திட்டமும் கிடையாது: மத்திய அரசு அறிவிப்பு!

இதுகுறித்து இந்த நிறுவன இயக்குனர் டாக்டர் கௌதமன் வான்கடே கூறியபோது:-

எங்களது நிறுவனம் வார இறுதி நாட்களில் கூட தொடர்ந்து உற்பத்தி செய்து வருகிறது. இந்த வாரத்திற்குள் ஒரு லட்சம் பரிசோதனைக் கருவிகள் உருவாக்க உள்ளோம், தேவைப்படும் பொழுது இரண்டு லட்சம் கூட உற்பத்தி செய்யத் தயாராக உள்ளோம் என்றார்.

இந்த MyLab நிறுவனம் இதுமட்டுமல்லாமல் எச்ஐவி (HIV) ஹெப்பாடிட்டீஸ் பி (Hepatitis B), ஹெப்பாடிட்டீஸ் சி (Hepatitis C)ஆகிய நோய்களை கண்டறியும் கருவிகளையும் உற்பத்தி செய்கிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Azərbaycanın ən yaxşı bukmeker kontor

Shobika

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்ட களத்தில் ராகுல்காந்தி

News Editor

வாயு சேனா பதக்கம் பெற்ற முதல் பெண் விங் கமாண்டர்!

Shanthi