உலகம்

கொரோனா சோதனை மாதிரிகளை எடுத்துச்சென்ற WHO வேன் மீது துப்பாக்கிச்சூடு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ராக்கைன்:-

மியான்மரில் கொரோனா சோதனைக்கான மாதிரிகளை கொண்டு சென்ற உலகச் சுகாதார அமைப்பின் வேன் மீது மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஓட்டுநர் மரணமடைந்தார்.

மியான்மரில் கொரோனா சோதனைக்கான மாதிரிகளை எடுத்துக்கொண்டு உலக சுகாதார அமைப்பின் வேன் ஒன்று சிட்வ்  (Sittwe)-இலிருந்து எங்கோன்-க்கு (Yangon) சென்றுகொண்டிருந்தது அப்பொழுது மர்ம நபர்கள் சிலர் சோதனை மாதிரிகளை எடுத்து சென்று கொண்டிருந்த வேன் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.

ALSO READ  ஆப்கானிஸ்தானில் பத்திரிகையாளர்கள் அரை நிர்வாணப்படுத்தி தாக்குதல்
courtesy.

இந்த தாக்குதலில் வேன் ஓட்டுநர் பயே சோன் விங் மாங் காயத்தினால் செவ்வாயன்று மரணமடைந்தார். அரசு ஊழியர் ஒருவர் படு ஆபத்தான நிலையில் மருததுவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராக்கைன் மாகாணத்தில் உள்ள மின்பியா ஊரில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது.

ஐநா தலைமை செயலர் அந்தோனியோ கட்டெரஸ் இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். இந்தத் தாக்குதல் நடத்தியவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

ALSO READ  மாஸ்க் அணிவதால் மட்டும் கொரோனாவிலிருந்து தப்ப முடியாது-WHO எச்சரிக்கை..

இந்த தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்த தெற்காசியாவுக்கான உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் பூனம் கேத்ரபால்சிங் கூறுகையில்:-

சுகாதார பணியாளர்களுக்கு எதிரான உடல் ரீதியாக மன ரீதியாக மற்றும் வார்த்தை ரீதியான எந்த தாக்குதல்களையும் பொறுத்துக் கொள்ள மாட்டோம். இதில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா வைரஸை ஒருபோதும் ஒழிக்க முடியாது டாக்டர் அந்தோணி ஃபவுசி… 

naveen santhakumar

டோக்கியோ ஒலிம்பிக்: வீரர்கள் தங்கி இருந்த ஓட்டல் ஊழியர்களுக்கு கொரோனா…!

naveen santhakumar

மீண்டும் வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடிதம்…

naveen santhakumar