தமிழகம்

ஆன்லைனில் மது விற்பனை உஷார்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

ஆன்லைனில் மதுபான விற்பனை தொடங்கவில்லை என டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில் மதுவிற்பனை குறித்து வந்த போலி டாஸ்மாக் ‘லிங்க்’ தடை செய்யப்பட்டுவிட்டதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் பெயரில் போலி இணையதளம் ஒன்று புதிதாக இயங்க ஆரம்பித்தது. அதில், ஆன்லைனில் மதுபானம் டெலிவரி செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டதோடு, பயனர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்கள் கேட்கப்படுகின்றன.

ALSO READ  முழு ஊரடங்கு; வீட்டிற்கே சென்று மது விற்கும் மாநில அரசு !

மது வகைகளின் பெயர்கள், அதன் விலைப் பட்டியல் அதில் இடம்பெற்றிருந்தது. மேலும் சிப்ஸ், சிக்கன் உள்ளிட்ட சைடிஷ் ஆர்டர் செய்வதும் இணையதளத்தில் இடம்பெற்றிருந்தன. இதனால் குஷியான மதுப் பிரியர்கள் உடனே அந்த இணையதள லிங்கை க்ளிக் செய்து தங்களது விவரத்தை பதிவு செய்ய ஆரம்பித்தனர். ஆனால், நேற்று நள்ளிரவு முதல் இணையதளம் செயல்படவில்லை.

இந்தத் தகவல் டாஸ்மாக் நிர்வாகத்தின் கவனத்திற்கு சென்றதையடுத்து, உடனடியாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ஆன்லைனில் மதுபான விற்பனை தொடங்கப்படவில்லை எனவும், சமூக வலைத்தளங்களில் மதுபான விற்பனை தொடர்பாக வரும் லிங்க் போலியானது என்றும் டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்தது.

ALSO READ  மதுபிரியர்களுக்கு மகத்தான அறிவிப்பு: மதியம் 12 முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் செயல்படும்

இந்த நிலையில் மது விற்பனை குறித்து வந்த போலி டாஸ்மாக் ‘லிங்க்’ தடை செய்யப்பட்டுவிட்டதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

6 பேர் பலி 16 பேர் காயம்- நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பாய்லர் வெடித்து விபத்து…

naveen santhakumar

சிறை மரணம்: சாத்தான்குளம் வணிகர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் உடல்கள் நல்லடக்கம்…

naveen santhakumar

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தந்தை…கதறியழும் மகள்… கண்ணீரை வரவழைக்கும் காட்சி….

naveen santhakumar