சினிமா

பட்டாஸ் படத்திற்காக “ஜிகிடி கில்லாடி”யாக மாறிய அனிருத்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு பட்டாஸ் படத்தின் மூன்றாவது பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கும் படம் “பட்டாஸ்” . இந்த படத்தின் நடிகைகள் சினேகா, மெஹரின் ஆகியோர் தனுசுக்கு ஜோடியாக நடித்துள்ளனர். பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருக்கும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

ALSO READ  தளபதி 65 படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை...படக்குழு கொடுத்த அப்டேட் !

ஏற்கனவே இசையமைப்பாளர் விவேக்-மெர்வின் இசையில் “சில் ப்ரோ” மற்றும் “வீரத்தமிழன் டா” ஆகிய பாடல்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு பட்டாஸ் படத்தின் மூன்றாவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இதுவரை வெளியான மூன்று பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். “ஜிகிடி கில்லாடி” எனத் தொடங்கும் இப்பாடல் இந்த ஆண்டு பொங்கலுக்கு அனைத்து இடங்களிலும் ஒலிக்கும் என விவேக் தெரிவித்துள்ளார். தங்கமகன் படத்திற்குப் பிறகு 4 ஆண்டுகளாக இணையாமல் இருந்த தனுஷ்-அனிருத் கூட்டணி மீண்டும் இப்பாடல் வழியாக இணைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உடற்பயிற்சி செய்யும் போது தவறி விழுந்த பிரபல நடிகர்… 

naveen santhakumar

அனுஷ்காவின் அடுத்த சரித்திர கதையம்சம் கொண்ட படம்:

naveen santhakumar

விஜய் சேதுபதி படத்தின் டிரைலர் வெளியீடு !

News Editor