உலகம்

அதிர்ச்சி!!! ராணுவத்தினர் தங்கியிருந்த இடத்தில்…. தோண்டத் தோண்ட… வரும் பெண்களின் உடைகள் மற்றும் எலும்புக்கூடுகள:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இலங்கை:

இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் தங்கியிருந்த இடத்தை தோன்றிய பொழுது பெண்களது ஆடைகளும், சில எலும்புக்கூடுகளும் கிடைத்தது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அன்னை மீனாட்சி மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு அருகில் ஒரு வீதியில்,  தனியாருக்கு சொந்தமான பகுதி ஒன்றில், கொட்டகை அமைப்பதற்காக அந்த நிலத்தை இடத்தின் உரிமையாளர் தோண்டியுள்ளார்.

நிலத்தை தோண்ட தோண்ட பெண்களின் உடைகளும் சில மனித எலும்புக்கூடுகள் மற்றும் மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டது. இதனை கண்டதும் அப்பகுதி மக்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். பிறகு அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது. இதனை போலீசாரிடம் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட பொழுது இந்த நிலம், கடந்த 2006 ஆம் ஆண்டு வரை இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்தது என்று தெரியவந்ததுள்ளது.

ALSO READ  போர் விமானங்களை ஏவுகணை தாக்குதலில் இருந்து காக்கும் நவீன தொழில்நுட்பம் -டி.ஆர்.டி.ஓ., உருவாக்கியுள்ளது

 இந்தப் பகுதியில், பெண்களின் ஆடைகளுடன் மண்டையோடுகள் மற்றும் எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளதால், பெண்களை கொன்று புதைத்துள்ளனரா??? இல்லை பாலியல் வன்புணர்வு செய்து புதைத்துள்ளனரா??? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த தகவல் பரவியதால் அந்த நிலத்தை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டு பலதரப்பு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ  உலகப் பிரசித்தி பெற்ற புத்தர் ஆலயத்தில் தமிழர்கள் ஒன்றுகூடி வழிபாடு

இதேப்போன்று, முன்பு மன்னார் உள்ளிட்ட தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில், ராணுவம் தங்கியிருந்த இடத்தினை தோன்றும் பொழுது இதே போன்று மனித எலும்புக்கூடுகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து, தற்பொழுது யாழ்ப்பாணத்திலும் இத்தகைய சம்பவம் நடந்திருப்பது பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்புகின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

2021 வரை நாட்டின் எல்லை மூடல்…

naveen santhakumar

யோகா கலையின் பிறப்பிடம் குறித்து சர்ச்சை பேச்சு -கே.பி. சர்மா ஒலி

Shobika

தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை – செந்தில் தொண்டமான் தகவல்

News Editor