இந்தியா

Paytm செயலி தடையை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவின் ஆன்லைன் பணபரிவர்த்தனை செயலிகளில் முக்கியமானதாக செயல்பட்டு வரும் paytm செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் தளங்களின் விளம்பரங்களை தங்களது செயலியில் இடம் பெற செய்ததால் paytm செயலி நீக்கப்பட்டதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த தடையால் தற்காலிகமாக paytm செயலியை புதிதாக பதிவிறக்கம் செய்யவோ அல்லது அப்டேட் செய்யவோ முடியாது. அதேசமயம் ஏற்கனவே செயலியை பயன்படுத்துபவர்கள் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். ஆனால் பயனாளர்கள் எக்காரணம் கொண்டும் எந்த சூழ்நிலையிலும் paytm செயலியை ஆட்டோ அப்டேட்(auto update) கொடுத்து விடாதீர்கள் புதிய அப்டேட்டினால்(new update) மீண்டும் அவை செயல்படாமல் போகலாம். 

இந்நிலையில் அனைவரது பணமும் பாதுகாப்பாக இருப்பதாகவும், விரைவில் மீண்டும் சேவை தொடங்கும் எனவும் ட்விட்டரில்(twitter) paytm நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ALSO READ  தமிழ் ராக்கர்ஸ் தளம் நிரந்தரமாக மூடப்படுகிறது:

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் தொடர் நடைபெறும் நிலையில், போட்டிகள் தொடர்பான ஆன்லைன் விளையாட்டுகள் அதிகளவில் நடைபெறுவது வழக்கம். இதில் விதிமீறல்கள் தொடர்ந்தால் அந்த செயலிகளின் இயக்கம் நிறுத்தப்படும் என்று ஆண்ட்ராய்டு(android) பாதுகாப்பு மற்றும் தனியுரிமை துணைத் தலைவர் சுசேன் ஃப்ரே எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் தளங்களின் விளம்பரங்களை நிறுத்திக்கொள்ளுமாறு மற்ற செயலிகளுக்கும் கூகுள் அறிக்கையிட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா மையங்களாக மாறிய கல்லாரிகளை……மீண்டும் கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைக்க முடிவு:

naveen santhakumar

கணவன் கேட்ட கேள்வி…..மனமுடைந்த புதுப்பெண்…..மணமான 8 நாளில் சோகம்…..

naveen santhakumar

கொரோனா பீதி : கோழி, முட்டை உணவை உண்டு அச்சம் போக்கிய அமைச்சர்கள்..!!!!

naveen santhakumar