இந்தியா

கொரோனா பீதி : கோழி, முட்டை உணவை உண்டு அச்சம் போக்கிய அமைச்சர்கள்..!!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனாவில் இருந்து கடந்த டிசம்பரில் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுமைக்கும் தற்போது அச்சுறுத்தலாகி வருகிறது. 

கொரோனா உலக பொருளாதாரத்தையே புரட்டிப் போட்டுள்ளது.

ஏனெனில், இதன் பாதிப்பு கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தையும் விட்டு வைக்கவில்லை. ஒருபுறம் கச்சா எண்ணெய் விலை சரிவு மறுபுறம் தங்கம் விலையேற்றம்.

இந்நிலையில் கொரோனா தற்போது கோழியையும் விட்டு வைக்கவில்லை.

கோழி இறைச்சி, முட்டை ஆகியவற்றை உண்பதால் கொரோனா தாக்கும் என வதந்தி பரவியது. கோழி இறைச்சி, முட்டை ஆகியவற்றை உண்பதால் கொரோனா பாதிப்பு ஏற்படாது என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தேசிய பிராய்லர் கவுன்சில் ஆகியவை ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளன.

ALSO READ  Pin Up Casino Online Az Azerbaijan Пин Ап Казино Pinup Rəsmi Saytı Pin Ap Bet 30

இதனால் கோழி இறைச்சி மற்றும் முட்டை வணிகம் 50% அளவுக்கு வீழ்ந்துள்ளது.

இதை மெய்ப்பித்துப் பொதுமக்களின் அச்சத்தைப் போக்க ஹைதராபாத்தில் தெலங்கானா அமைச்சர்கள் KT ராமராவ், எடேலா ராஜேந்தர், தலசானி சீனிவாஸ் யாதவ் உள்ளிட்ட அமைச்சர்கள் பொது இடத்தில் நடந்த விருந்தில் கோழி இறைச்சி, முட்டை ஆகிய உணவுகளைச் சாப்பிட்டனர்.

ALSO READ  கொரோனா மருத்துவ சிகிச்சை காப்பீடு- ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம்....

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முகநூலில் பிழையை கண்டுபிடித்த மாணவருக்கு ரூ.22 லட்சம் பரிசு தொகை :

Shobika

கங்கை நதியில் வேடிக்கை பார்த்தவரை எட்டி உதைத்து தள்ளிவிட்ட போலீஸ்… 

naveen santhakumar

ட்ராக்டர் பேரணியில் நடந்த வன்முறைக்கு காரணமானவர் கைது !  

News Editor