தமிழகம்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை-முதல்வர்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மருத்துவப் படிப்புகளில் 7.5% சதவீத இடஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்புகளில் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், பல்வேறு கட்ட வலியுறுத்தலுக்குப் பின்னர் ஒன்றரை மாதத்திற்குப் பிறகு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர் பினேகாஸ் என்பவர் கோரிக்கை வைத்தார்.முறைப்படி மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு தெரிவித்துள்ளது.

ALSO READ  1ம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசம் !

இந்நிலையில் நீலகிரியில் கொரோனா குறித்த நடவடிக்கைகளை ஆய்வு செய்து வரும் முதல்வர் பழனிசாமியிடம், இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த முதல்வர், மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே என பதிலளித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சென்னை மழை, வெள்ளம்: உதவி எண்கள் அறிவிப்பு

naveen santhakumar

நீட் தேர்வு ரத்து: அமைச்சர் உறுதி..!

naveen santhakumar

சென்னையில் 115-வது நாளாக நீடிக்கும் பெட்ரோல், டீசல் விலை!

Shanthi