இந்தியா

விக்கிபீடியா(Wikipedia) தளத்திற்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி: 

காஷ்மீர் குறித்து தவறான வரைபடத்தை வெளியிட்ட விக்கிபீடியா(wikipedia) இணையதளத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர், டுவிட்டர்(twitter) பயனாளர் ஒருவர், இந்தியா – பூடான் உறவு குறித்த விக்கிபீடியா(Wikipedia) பக்கம் காஷ்மீரின் வரைபடத்தை தவறாக சித்தரித்திருப்பதாகக்கூறி, நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

ALSO READ  இந்தியாவிலேயே இந்த ரயில் நிலைய உணவு தான் சிறந்தது…!

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தை விசாரித்த தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விக்கிபீடியாவிற்கு(Wikipedia) அனுப்பியுள்ள எச்சரிக்கை நோட்டீசில் தெரிவித்திருப்பதாவது,”காஷ்மீரை தவறாக சித்தரிக்கும் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.இதன் மூலம் விக்கிபீடியா(Wikipedia) இணையதளம் இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் மீறியுள்ளது. 

பிரச்னைக்குரிய குறிப்பிட்ட பக்கத்தில் காஷ்மீரின் தவறான படத்தை அகற்ற வேண்டும்.மேலும் உடனடியாக மாற்றங்களை செய்யாவிட்டால், விக்கிபீடியா இணையதளத்தை முடக்குவது உள்ளிட்ட பல நடவடிக்கையை, இந்திய அரசு எடுக்கும்” என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மகாராஷ்டிராவின் முதல் பெண் தேர்தல் ஆணையர் கொரோனாவால் பலி!….

naveen santhakumar

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டும்- கொரோனாவுக்கு பெண் உயிரிழப்பு ..!

naveen santhakumar

யானையின் மீது யோகா சாகசத்தின் போது கீழே விழுந்த பாபா ராம்தேவ்:

naveen santhakumar