இந்தியா சுற்றுலா

இந்தியாவிலேயே இந்த ரயில் நிலைய உணவு தான் சிறந்தது…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவிலேயே இந்த ரயில் நிலைய உணவு தான் சிறந்தது…!

பயணங்கள் மேற்கொள்ள எந்தளவு நாம் பிரியப்படுவோமோ அதை விட இருமடங்கு அங்கு கிடைக்கும் உணவுகளின் தரம் குறித்து கவலைப்படுவோம். குறிப்பாக ரயில் பயணம் செய்பவர்களின் நிலைமையோ பரிதாபம். அங்கு கிடைக்கும் உணவுகளை பலர் வாங்காமல் தவிர்ப்பார்கள். ஆனால் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) இந்தியாவிலேயே இந்த ரயில் நிலையத்தில் கிடைக்கும் உணவு தான் சிறந்தது என அறிவித்துள்ளது. அது மும்பையில் அமைந்துள்ள மத்திய ரயில் நிலையம்.

மும்பை மத்திய நிலையத்தில் கிடைக்கும் உணவுகளின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், ஆரோக்கியம், தயாரிக்கும் முறை மற்றும் உணவை கையாளுதல், உணவு கழிவுகளை அப்புறப்படுத்துதல், உள்ளூர் மற்றும் பருவகால ஊக்குவிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  நவம்பர்-2ல் குறிப்பிட்ட கட்டுபாடுகளுடன் பள்ளிகளை திறக்க அரசு முடிவு:

இதனையடுத்து FSSAI அதிகாரிகள் மும்பை மத்திய ரயில் நிலையத்தில் உள்ள கேட்டரிங் நிறுவனங்களை ஆய்வு செய்து, உணவின் தரத்தை மதிப்பிட்டு “Eat in Right” என்ற சான்றிதழ் அளித்தனர். மேலும் “Eat in Right” அடிப்படையில் 4 ஸ்டார் மதிப்பீடுகளும் அளிக்கப்பட்டுள்ளது.

இது உணவு வணிகத்தில் இருப்பவர்கள் தங்கள் தயாரிப்புகளை மறுசீரமைக்க ஊக்குவிக்கவும், நுகர்வோருக்கு அதிக ஊட்டச்சத்துள்ள உணவு குறித்த விழிப்புணர்வை வழங்குவதற்கும் உதவும்.

ALSO READ  【oficjalna Strona We Bonus W Pln

நீங்களும் மும்பை சென்றால் ஒருமுறையாவது இந்தியாவின் சிறந்த ரயில் நிலைய உணவை ருசி பாருங்கள்…


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சம்பள பாக்கி கேட்ட பெண் ஊழியர் மீது நாயை ஏவி கடிக்க விட்ட கொடூர உரிமையாளர்… 

naveen santhakumar

“நான் தான் விகாஸ் துபே கான்பூர் காரன்” ஓங்கி அறைந்து வண்டியில் ஏற்றிய போலீசார்- உ.பி-யில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ்துபே கைது… 

naveen santhakumar

இப்படி ஒரு கின்னஸ் சாதனையா?:ஆச்சரியப்படுத்தும் இளம்பெண்

Admin