சினிமா

விஷாலின் “எனிமி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆனந்த் ஷங்கர் தமிழில் இருமுகன், நோட்டா, அரிமா நம்பி போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானார் இவர் தற்போது நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இருவரையும்  வைத்து எனிமி என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிருநாளினி  ரவி நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து நடிகர் ஆர்யா படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார், தமன்  படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ALSO READ  15 போன்களில் Whatsapp chat.. கணவனின் கள்ளத்தனத்தை கண்டுபிடித்த மனைவி

கடந்த 2011ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் “அவன் இவன்” திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஷாலும் , ஆர்யாவும் இணைந்து நடித்திருந்தனர். “அவன் இவன்” படத்தில் இருவருமே போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி இருந்தனர். அப்படத்திற்கு பிறகு தற்போது நடிகர் விஷாலும் ஆர்யாவும் இணைந்து “எனிமி” படத்தில் நடித்துள்ளனர்.

9 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த ஜோடி இணைந்துள்ளதால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்தான் “எனிமி” படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு  வெளியிட்டுள்ளது.அதனை தொடர்ந்து  இந்த போஸ்டர் தற்போது  இணையத்தில் வைரலாகி வருகிறது.

ALSO READ  கொரோனா தடுப்பூசி குறித்து தனக்கும் தயக்கம் இருந்தது; நடிகை திவ்யதர்ஷினி !


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளை அள்ளிய அசுரன் !

News Editor

ராஷ்மிகா மந்தனாவுடன் இணையும் சமந்தா… 

naveen santhakumar

எஸ்.பி.பாலசுப்ரமணியம் – முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று

News Editor