உலகம்

உருமாறிய கொரோனா வைரஸ் : மீண்டும் முழு ஊரடங்கு அமல் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இங்கிலாந்து நாட்டில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் அந்நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ்  வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலைத் தொடர்ந்து, தென்கிழக்கு இங்கிலாந்து மற்றும் லண்டன் நகரில் ஏற்கனவே தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.   

இந்நிலையில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இங்கிலாந்து முழுவதும் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் “இங்கிலாந்தின் பல பகுதிகள் ஏற்கனவே கடுமையான கட்டுப்பாடுகளுக்குக் கீழ் இருந்தாலும், கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும், இந்த புதிய வகை கொரோனாவைக் கட்டுப்படுத்த நாம் ஒற்றுமையாக, இன்னும்  அதிகம் செய்ய வேண்டும் என்பது தெளிவாகிறது” என  தெரிவித்துள்ளார். 

ALSO READ  கொரோனா வைரஸ் பற்றி 40 வருடம் முன்பே சொன்ன திகில் நாவல்!

இங்கிலாந்தில் தற்போது 27,000 பேர் கொரோனா தொற்றோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது ஏப்ரல் மாதத்தில், கொரோனா முதல் அலையின்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை விட 40 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, பிப்ரவரி மாதத்தின் இடைப்பகுதி வரை தொடரலாம் என கூறப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பள்ளி மாணவர்களுக்காக ஆசிரியராக மாறிய ஜஸ்டின் ட்ரூடோ…

naveen santhakumar

ஜோ பிடனுடன் இணைந்து செயல்பட விரும்பும் விளாடிமிர் புடின்:

naveen santhakumar

கொரோனாவிற்கான பைசர் தடுப்பூசி போடப்பட்ட 2 பேருக்கு ஒவ்வாமை :

naveen santhakumar