உலகம்

அமெரிக்க தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி உயிரிழப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது ராக்கெட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் வெடித்து சிதறின.விமான நிலையத்தில் சரக்குகள் கையாளும் பகுதியில் ராக்கெட்டுகள் விழுந்து வெடித்தன. இந்த தாக்குதலில்,ஈரானிய புரட்சி பாதுகாப்பு படையின் குத்ஸ் படைப்பிரிவு தளபதி காசிம் சோலிமானி,ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் முக்கிய கமெண்டர் அபு மகாதி உள்ளிட்ட 7பேர் கொல்லப்பட்டனர்.

ALSO READ  அறிவியலாளர் ஜகதீஷ் சந்திர போஸ் மறைந்த தினம்

ஈரான் ராணுவ தளபதி காசிம் சோலிமானி கொல்லப்பட்டதை உறுதி செய்த பென்டகன், அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளது. வெளிநாடுகளில்,அமெரிக்கர்களின் நலனை காக்கும் வகையில்,அதிபர் டிரம்ப் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என கூறப்பட்டு உள்ளது.காசிம் சுலைமானி,அமெரிக்காவால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல ஆண்டுகளாக பனிப்போர் நிலவி வந்த நிலையில்,அமெரிக்கப் படைகள் தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி உயிரிழப்பு, 3-ம் உலகப் போருக்கான தொடக்கப் புள்ளி என்று சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா வைரஸ் பாதித்த நோயாளியின் நுரையீரல் வீடியோ…

naveen santhakumar

‘உங்களைப் பாதுகாப்பதன் மூலம் உங்கள் வீட்டை பாதுகாக்கலாம்’- ஜாக்கி சான்….

naveen santhakumar

இதோ வந்துவிட்டது டெல்டா பிளஸ் வைரஸை விட மிக தீவிரமான லாம்ப்டா வைரஸ்…!

naveen santhakumar