உலகம் தொழில்நுட்பம்

கொரோனா வைரஸ் பாதித்த நோயாளியின் நுரையீரல் வீடியோ…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்(DC):-

ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவமனையின் தொராசிக் அறுவை சிகிச்சையின் தலைவர் டாக்டர் கீத் மோர்ட்மேன் கொரோனா நுரையீரலை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்த வீடியோவை வெளியிட்டு மக்கள் இதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

உயர் இரத்த அழுத்தம் கொண்ட ஆரோக்கியமான 50களில் உள்ள ஆணின் நுரையீரல் நோய் தொற்றால் மிகுந்த சேதம் ஏற்பட்டு உள்ளதை இந்த வீடியோ காட்டுகிறது என்று மோர்ட்மேன் கூறினார். 

இந்த வீடியோ 360 டிகிரி கோணத்தில் தொற்று நோயால் உடலில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை மிகத் தெளிவாக காட்டுகிறது.

தீவிரமாக நோய்வாய்ப்பட்டதிலிருந்து, நோயாளிக்கு மூச்சு விட உதவ ஒரு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. ஆனால் இது போதாதாமல் மற்றொரு இயந்திரம் தேவைப்படுகிறது, அது அவரது இரத்தத்தை சுழற்றுகிறது, பின்னர் ஆக்ஸிஜன் ஏற்றுகிறது.

ALSO READ  கருணை அடிப்படையில் ஜூமாவுக்கு ஜாமீன் :

வீடியோவில் மஞ்சள் நிறத்தில் குறிக்கப்பட்ட பகுதிகள் நுரையீரலின் பாதிக்கப்பட்ட மற்றும் வீக்கமடைந்த பகுதிகளைக் குறிக்கின்றன. நீள நிறப்பகுதி பாதிக்கப்படாமல் உள்ள நுரையீரலின் மற்ற பகுதிகளை காட்டுகிறது.

தான், தொழில்நுட்பத்தை நம்புவதாகும் இந்த பிரச்சனைக்கு கூடிய விரைவில் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்றும் கூறுகிறார் மோர்ட்மேன். ஆனால் அதே சமயம் தொற்றால் நோயாளியின் உடல்நிலை எந்த அளவிற்கு பாதிப்படைகிறது என்பதை காட்டுவதற்காகவே இந்த வீடியோவை வெளியிட்டதாகவும் கூறுகிறார்.

ALSO READ  கிரீஸ் நாட்டில் திடீரென்று நிலநடுக்கம் :

இது ஏதோ நிமோனியா காய்ச்சல் மாதிரியோ அல்லது ஃபுளு காய்ச்சல் மாதிரியோ நுரையீரலின் ஒரே ஒரு பகுதியை மட்டும் சேதப்படுத்தவில்லை, மாறாக மொத்த நுரையீரலையும் சேதப்படுத்துகிறது.

இந்த அளவிற்கு ஒரு முறை சேதமடைந்தால், நுரையீரல் குணமடைய நீண்ட காலம் ஆகலாம். மக்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டும், இந்த நோய் என்ன செய்யும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று மோர்ட்மேன் கூறினார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கனடாவில் பயங்கரம்: 16 பேர் கொடுரமாக சுட்டுக்கொலை… நடந்தது என்ன??

naveen santhakumar

சீனா ஏவிய அதிநவீன குவைசவ்-11 கீழே விழுந்து வெடித்து சிதறியது… 

naveen santhakumar

வளமையின் சின்னமாக ஆண் குறி ஓவியம்.. எந்த நாடு தெரியுமா???

naveen santhakumar