லைஃப் ஸ்டைல்

அடர்த்தியான ,பளபளப்பான ,கருமையான கூந்தலை பெற கொலாஜன் ஹேர் மாஸ்க்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொலாஜன் புரதமானது முடி பராமரிப்புக்கு அதிக நன்மைகளை தருகிறது.உச்சந்தலை பகுதிக்கும் முடி வளர்ச்சிக்கும் பெரிதும் உதவக்கூடியது. முடி உதிர்தலுக்கு காரணமான மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.கொலாஜன் நிறைவாக இருந்தால் அதிக வலுவான மயிர்க்கால்களை பெறுவதன் மூலம் முடி அடர்த்தியாக வலுவாக பெறலாம். மேலும் கொலாஜன் உற்பத்தி சீராக இருந்தால் முடி உதிர்தலும் முடி மெலிதலுக்கான சிக்கல்களும் வராமல் தடுக்க முடியும். கொலாஜன் வலுவான கூந்தலை ஊக்குவிக்கும் வகையில் ஆரோக்கியமான நன்மைகளை பெறுகிறது.

கொலாஜன் ஹேர் மாஸ்க் செய்ய தேவையான பொருட்கள்

*ஆலிவ் எண்ணெய் -2 டீஸ்பூன்
*தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
*கொலாஜன் -1 டீஸ்பூன்

மூன்றையும் சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும். எண்ணெயோடு கொலாஜன் நிறைவாக கலந்திருக்க வேண்டும். கூந்தலை சிக்கில்லாமல் சீவி வையுங்கள். இப்போது இதை எடுத்து உச்சந்தலை பகுதி முழுவதும் தடவி மிதமாக மசாஜ் செய்யவும். கூந்தலின் மேல் முதல் அடிவரை தடவவும். பிறகு 20-30 நிமிடங்கள் வரை விட்டு லேசான ஷாம்பு கொண்டு கூந்தலை அலசி எடுக்கவும்.

முடி பராமரிப்புக்கு இயல்பாகவே மாதம் ஒரு முறை இந்த மாஸ்க் பயன்படுத்துங்கள். முடி உதிர்வு குறையும். முடி வளர்ச்சி அதிகரிக்க செய்யும். முடி உதிர்வு அதிகம் இருப்பவர்கள் மாதம் இருமுறை இந்த மாஸ்க் போடுவதன் மூலம் முடி வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும்.கொலாஜன் ஹேர் மாஸ்க் கூந்தலின் நிறத்தை பாதுகாக்க செய்கிறது. மயிர்க்கால்களின் நிறத்தை பலப்படுத்துவதால் நரைமுடி பிரச்சனை தள்ளி வைக்கிறது. மேலும் இது கூந்தலின் சாம்பல் நிறத்தை தடுத்து கருமை நிறத்தை உண்டாக்குகிறது.

ALSO READ  திராவிட மாடல் ஆட்சிக்கு சென்னை ஒரு ரோல் மாடல்!

முடி உடைவு, முடி பிளவு போன்றவற்றை தடுத்து முடியின் நுனி வரை பளபளப்பை தருகிறது.உலர்ந்த கூந்தல், எண்ணெய்பசை கூந்தல், முடி உதிர்தல், முடி பிளவு என எல்லா பிரச்சனைகளுக்கும் கொலாஜன் தீர்வு அளிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. முடியின் சேதத்தை தவிர்த்து முடி வளர்ச்சியை ஒட்டுமொத்தமாக அதிகரிக்கும் கொலாஜன் ஹேர் மாஸ்க் நீளமான அடர்த்தியான முடிக்கு சிறப்பாக உதவும். ஒரு முறை பயன்படுத்தினாலே கூந்தலின் வித்தியாசத்தை நீங்கள் உணர்வீர்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பக்கவாதமாக மாறிய தலைவலி.. மாடல் அழகியின் பரிதாப நிலை

News Editor

நமது முன்னோர்கள் “தன்னிகரற்ற” மாபெரும் அறிவாளிகள்

Admin

அழகை அள்ளி கொடுக்கும் ஆவாரம் பூ…..

Shobika