இந்தியா

மனைவியை விவாகரத்து செய்தாலும் குழந்தைகளை பராமரிக்கும் கடமை தந்தைக்கு உள்ளது-உச்ச நீதிமன்றம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடில்லி:

மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம். ஆனால் குழந்தைகளை விவாகரத்து செய்ய முடியாது.குழந்தைகளை பெற்றவர் என்ற முறையில் அவர்களை பராமரிக்கும் கடமை தந்தைக்கு உண்டு என என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மனைவியை விவாகரத்து செய்த கணவர் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் பராமரிப்பு செலவுக்கு 4 கோடி ரூபாய் வழங்க குடும்ப நல நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. ஆனால் குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டும் கணவர் பணத்தை தரவில்லை.

இதையடுத்து மனைவி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தார். கணவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விவாகரத்து செய்யும் போது குடும்ப நல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளார். கொரோனா தொற்று காரணமாக வியாபாரம் சரிவர நடக்கவில்லை. எனவே குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்ட 4 கோடி ரூபாயை தர முடியுவில்லை என வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள் சந்திரசூட் எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு, மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம். ஆனால் குழந்தைகளை விவாகரத்து செய்ய முடியாது.

ALSO READ  இறப்பு சான்றிதழ்: மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல் என்ன?
மாநிலங்களுக்கு ஆக்சிஜனை பகிர்ந்தளிக்க 12 பேர் குழு: உச்ச நீதிமன்றம் நியமனம்  | supreme court - hindutamil.in

குழந்தைகளை பெற்றவர் என்ற முறையில் அவர்களை பராமரிக்கும் கடமை தந்தைக்கு உண்டு. எனவே குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்ட 4 கோடி ரூபாயை மனைவியிடம் வழங்க முடியாததற்கு நிதி நெருக்கடி என கூறும் காரணத்தை ஏற்க முடியாது.

ALSO READ  டெல்லி மாசுக்கு பாக். தான் காரணம்; உ.பி. அரசு - பாக். தொழிற்சாலைகளை தடை செய்ய சொல்றீங்களா உச்ச நீதிமன்றம்

ஆகவே செப். 1ம் தேதிக்குள் ஒரு கோடி ரூபாயையும் செப். 30ம் தேதிக்குள் 3 கோடி ரூபாயையும் விவாகரத்து செய்த மனைவியிடம் வழங்க கணவருக்கு உத்தரவிடப்படுகிறது என நீதிபதிகள் சந்திரசூட் எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வைரம் பதித்த முகக்கவசங்கள் விற்பனைக்கு- பலே நகைக்கடை… 

naveen santhakumar

நீதிபதி முரளிதரும் அவரது அதிரடி தீர்ப்புகளும்..!!!!

naveen santhakumar

நவ. 28: பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

naveen santhakumar