இந்தியா

வைரம் பதித்த முகக்கவசங்கள் விற்பனைக்கு- பலே நகைக்கடை… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சூரத்:-

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள நகைக்கடை ஒன்று வைரம் பதித்த N95 முகக் கவசங்கள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களை கவர பல்வேறு வண்ணங்கள் மற்றும் பிரபலங்களின் படங்களுடன் முகக்கவசங்கள் விற்பனை செய்யப்படும் செய்திகளை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் சூரத்தில் உள்ள குஷால் தாஸ் என்ற நகைக்கடை இதற்கு எல்லாம் ஒரு படி மேலே சென்று வைரம் பதித்த முகக்கவசங்களை விற்பனைக்கு வைத்து அனைவரையும் வியப்பில்  ஆழ்த்தியுள்ளது. 

வைரம் பதித்த இந்த முகக்கவசங்கள் ரூ.1.5 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் நகைக்கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ALSO READ  கொரோனா வைரஸ் நீங்க சிறுமியின் நாக்கை வெட்டி கோவிலுக்கு காணிக்கையாக்கிய பூசாரி..!!! நடந்தது என்ன??...

இதுதொடர்பாக நகைக் கடையின் உரிமையாளர் தீபக் சோக்ஸி கூறும்போது:-

வாடிக்கையாளர் ஒருவர் தனது வீட்டில் வைத்து நடைபெறும் திருமணத்திற்காக எங்கள் கடைக்கு வந்து, மணமகனுக்கும், மணமகளுக்கும் தனித்துவமான முகக்கவசங்கள் வேண்டும் என கோரியதைத் தொடர்ந்து, தனக்கு இந்த யோசனை வந்ததாக கூறினார். இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த முகக் கவசங்களில் சுத்தமான வைரம் மற்றும் அமெரிக்க வைரத்தை பதிக்கிறோம். மேலும் இதில் தங்கத்தையும் சேர்த்து உள்ளோம் என்று கூறினார். 

ALSO READ  பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து; ராகுல் காந்தி ட்வீட் !

ஒவ்வொரு முகக்கவசத்திலும் 150 முதல் 400 வரை அவரவர் விலைக்கு ஏற்ற வகையில் வைரங்களை பதித்து தருகிறோம் என்று கூறினார்.

இதற்கு முன்னர் மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே பிம்பிரி- சின்ச்வாட் (Pimpri-Chinchwad) பகுதியை சேர்ந்த சங்கர் குராடே (Shankar Kurade) தங்கத்தினாலான மாஸ்க் அணிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

كيفية إنشاء حساب 1xbet تسجيل الدخول للمراهنين في المغر

Shobika

Glory Casino Online ️ Play on official site in Banglades

Shobika

இந்தியாவில் வேகமாக பரவும் : புதியவகை கொரோனா – ஐசிஎம்ஆர் தகவல்

naveen santhakumar