அரசியல் தமிழகம்

எம்.ஜி.ஆர் படம் வெளியாகும் போது முதல் நபராக படத்திற்கு செல்வேன்?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

எம்.ஜி.ஆர். தனிக்கட்சி தொடங்கினாலும் அண்ணாவின் கொள்கையாளராகவே இருந்தார் என சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஜானகி எம்ஜிஆரின் நூற்றாண்டு துவக்க விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஜானகி எம்ஜிஆரின் நூற்றாண்டு துவக்க விழாவில் கலந்து கொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமைக்குரியவர் ஜானகி எம்.ஜி.ஆர். ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு துவக்கவிழா நடத்துவது சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். மாணவராக இருந்தபோது பள்ளி நிதி பெறுவதற்காக எம்.ஜி.ஆரை சந்திக்க சத்யா ஸ்டுடியோவுக்கு வந்த போது எம்.ஜி.ஆர் உடன் நெருங்கி பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நன்றாக படிக்க வேண்டும் என்று என்னிடம் உரிமையுடன் கூறுவார் என்றும் எம்.ஜி.ஆர் நடித்த படம் வெளியாகும் போது முதல் நபராக நான் படத்திற்கு செல்வேன். எம்.ஜி.ஆரும் என்னை தொலைபேசியில் அழைத்து திரைப்படம் எப்படி இருந்தது என கேட்பார் என்றார். மேலும் மருதநாட்டு இளவரசி படத்தில் 3 முதல்வர்களின் பங்களிப்பு இருந்தது. தமிழ் உள்ளிட்ட 6 மொழிகளை நன்கு அறிந்தவர் ஜானகி அம்மையார். தனிக்கட்சி எம்.ஜி.ஆர். தொடங்கினாலும் அண்ணாவின் கொள்கையாளராகவே இருந்தார்.

எம்ஜிஆரின் பங்களிப்பு திமுகவில் தான் அதிகம். அதிமுகவை விட, திமுகவில் தான் எம்ஜிஆரின் பங்களிப்பு அதிகம். எம்ஜிஆர் திமுகவில் அதிக காலம் இருந்தவர் என்றார். மேலும் எம்ஜிஆரை திமுகவிற்கு அழைத்து வந்தவர் கருணாநிதி. தேசிய இயக்கத்தில் இருந்த எம்ஜிஆரை, திமுகவிற்கு அழைத்து வந்தவர் கருணாநிதி. எம்ஜிஆர் ஜானகி கல்லூரிக்கு அனுமதி வழங்கியது கருணாநிதி தான். டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி உருவாக துணையாக இருந்தவர் கருணாநிதி. செவிக்குறைபாடு, பேச்சுக்குறைபாடு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்; நிச்சயமாக இக்கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறினார்.


Share
ALSO READ  மோடி வரும் பொழுது திருக்குறளை பேசுவார், போகும் பொழுது பெட்ரோல் விலையை உயர்த்துவார்; ஸ்டாலின் குற்றசாட்டு !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எம்ஜிஆரின் அண்ணன் மகள் லீலாவதி மறைவு

naveen santhakumar

108 ஆம்புலன்ஸ் வர தாமதம்… பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு நடுரோட்டில் பிரசவம் பார்த்த எழுத்தாளர் ஆட்டோ சந்திரன்….

naveen santhakumar

கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் தனிமைப்படுத்தப்பட்டார்….

naveen santhakumar