தமிழகம்

108 ஆம்புலன்ஸ் வர தாமதம்… பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு நடுரோட்டில் பிரசவம் பார்த்த எழுத்தாளர் ஆட்டோ சந்திரன்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கோவை:-

நடுரோட்டில் பிரசவ வலியால் துடித்த ஒடிசா மாநில பெண்ணிற்கு ஆட்டோ ஓட்டுநரும் எழுத்தாளருமான சந்திரன் பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலை அருகே உள்ள துளசி லேஅவுட் பகுதியில் ஏராளமான ஒடிசா மாநிலத்தவர் சாலையில் வசித்து வருகின்றனர். கூலி வேலை செய்யும் இவர்கள், ரயில்வே கேட் அருகே கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனர்.

இங்கு வசித்து வரும் 26 வயது பெண்ணிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரின் கணவர் அந்த பெண்ணை தூக்கி வரும்போது அவர் பிரசவ வலியால் துடித்துள்ளார்.
அங்குள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பாக அந்த பெண்ணை உட்கார வைத்து விட்டு ஆம்புலன்சுக்கு அழைப்பு  குடுத்து காத்திருந்தார்.

மேலும் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் விசாரணை படத்திற்கு கருவான “லாக் அப்” என்ற நாவலின் எழுத்தாளர் சந்திரனுக்கும் தகவல் கொடுத்தனர். எழுத்தாளர் ஆட்டோ சந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தனது ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டார்.

ALSO READ  கோவையில் காவலர்களுக்கு கொரோனா காவல் நிலையம் மூடல்...

ஆனால் பெண்ணின் வயிற்றிலிருந்த குழந்தையின் தலை வெளியே வந்துள்ளது. இதனால் வேறு வழியின்றி, 108 ஆம்புலன்ஸ் வருவதற்குள் சாலை ஓரத்திலேயே பெண்ணுக்கு பிரசவத்தை பார்த்தார் ஆட்டோ சந்திரன்.

அப்போது அந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தொப்புள் கொடியை அறுத்து தாய்,சேய் இருவரையும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

ALSO READ  வயது வித்தியாசம் பார்க்காமல் பல பெண்களின் கற்பை சூறையாடிய மேடைப் பாடகர் !

இந்த காட்சிகள் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் தக்க நேரத்தில் வந்து உதவிய எழுத்தாளர் சந்திரனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கோவையில் 6 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ..!

News Editor

குரூப் 4 முறைகேடு தொடர்பாக 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் – TNPSC அதிரடி

Admin

வாடிவாசலை தாண்டினா மட்டும் போதும்… காளை உரிமையாளர்களுக்கு காத்திருக்கும் பரிசு!

naveen santhakumar