சினிமா

இயக்குநராகும் பிரபல நடிகை… என்ன படம் தெரியுமா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரபல நடிகை ரம்யா நம்பீசன் காதலை மையமாக வைத்து குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

தமிழில் ஒருநாள் ஒரு கனவு படம் அறிமுகமான நடிகை ரம்யா நம்பீசன், தமிழில் ராமன் தேடிய சீதை, ஆட்டநாயகன், குள்ளநரி கூட்டம், பீட்சா, சேதுபதி ஆகிய தமிழ் படங்களிலும், மலையாளத்தில் சில படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது விஜய் ஆண்டனியின் தமிழரசன், ரியோவுடன் பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பாண்டிய நாடு, சகலகலா வல்லவன், டமால் டூமில் ஆகிய பல படங்களில் பாடல் பாடியுள்ளார்.

ALSO READ  கார் விபத்து: யாஷிகா அளித்த வாக்குமூலம்!

இந்நிலையில் ‘அன்ஹைட்’ என்னும் குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார் ரம்யா நம்பீசன்.

காதலை மையமாக வைத்து உருவாகும் இந்த படமானது காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது. நடிகை, பாடகி, தற்போது இயக்குநர் என ரம்யா நம்பீசனின் திறமையை திரையுலகம் பாராட்டி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘ஜாக் ரீச்சர்’ பட வாய்ப்பை டாம் க்ரூஸிடம் இழந்தேன் – WWE Rock…

naveen santhakumar

தேசிய விருது பெற்ற இயக்குநருடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி!

News Editor

அப்டேட் வெளியிட்ட ‘கர்ணன்’ படக்குழு !

News Editor