ஜோதிடம்

2020 ஆம் ஆண்டு துலாம் ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உடல் ஆரோக்கியம்

உடல்நிலை சற்று மந்தமாக இருந்தாலும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. தேவையற்ற பயணங்களை குறைத்தால் அலைச்சல்கள் ஏற்படாது.ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும் குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். உணவு பழக்கத்தில் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது….

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் நடந்து கொள்ள வேண்டும். உறவினர்களிடம் பேசும்போது நிதானத்துடன் பேச வேண்டும்.
நீண்ட நாட்கள் வாங்க நினைத்த வீடு வண்டி‌ போன்ற சுப செலவுகள் உண்டாகும். கடன்கள் ஏற்படலாம் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைக்கவும்.

தொழில் வியாபாரம்

ALSO READ  ரஜினியின் முடிவு குறித்து இயக்குனர் லிங்குசாமி கருத்து..!

நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும் பெரிய முதலீடுகள் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. மறைமுக எதிர்ப்புகள் எழுந்தாலும் எதையும் சுலபமாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.பொருளாதார நிலையைப் பொறுத்தவரை நன்றாக இருந்தாலும் அதிகப்படியான அலைச்சலால் நிம்மதி குறையும்.

உத்தியோகம்

நீங்கள் செய்யும் வேலையைப் பொறுத்தவரை நிதானமாக செயல்பட்டால் அதிகாரிகளின் ஆதரவைப் பெற முடியும்.உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும் செய்யும் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். உடன் பணிபுரிபவர்களின் வேலையையும் நீங்களே செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும்.

ALSO READ  நீங்கள் இப்படி சாப்பிடுபவராக இருந்தால்….. நிச்சயம் உங்கள் வீட்டில் தரித்திரம் கங்ணம் ஸ்டைலில் நடனமாடும்:

விவசாயிகள்

விவசாயத்தைப் பொறுத்தவரை பயிர் விளைச்சல் சுமாராக தான் இருக்கும். நீங்கள் போட்ட முதலீட்டினை எடுக்க சற்று கூடுதலாக முயற் சிக்க வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்களுடன் கவனத்தோடு பேசுவது அவசியம். கால்நடைகளால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிக்கனமாக செயல்படுவது நல்லது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆப்பிள் பழத்தின் மருத்துவ பயன்கள்!!

Admin

சமூக விலைகளை கடைபிடிக்க நெதர்லாந்து உணவகம் கண்டுபிடித்த சூப்பர் ஐடியா…

naveen santhakumar

திருவாதிரை அன்று களி ஏன்?

Admin