தொழில்நுட்பம்

மாஸ் காட்ட இந்தியாவுக்கு வரும் எலக்ட்ரிக் கார்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா நகரில், பிப்ரவரி 5ம் தேதி தொடங்கிய ஆட்டோ எக்ஸ்போ திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்த எக்ஸ்போ திருவிழாவில் ஏராளமான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உட்பட வெளிநாட்டு நிறுவனங்களும் பங்கேற்றன.இதில், Haima என்ற நிறுவனம் முக்கிய பங்கு வகித்தது. 7எக்ஸ், 8எஸ் மற்றும் இ1 என மொத்தம் 3 தயாரிப்புகளை ஹெய்மா நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுக படுத்தியுள்ளது.

இதில், ஹெய்மா இ1 எலெக்ட்ரிக் கார்தான் இந்தியாவில் ஹெய்மா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரும் முதல் மாடலாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.ஹெய்மா இ1 ஹேட்ச்பேக் ரக கார் ஆகும். ஹெய்மா இ1 காரில், 54 பிஎச்பி பவர் மற்றும் 140 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.

ALSO READ  ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை இன்று...

இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டால், மஹிந்திரா இகேயூவி100 உள்ளிட்ட மாடல்களுடன் இது போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021ம் ஆண்டின் கடைசி அல்லது 2022ம் ஆண்டின் தொடக்கத்தில், இ1 எலெக்ட்ரிக் காரை ஹெய்மா நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

10 லட்ச ரூபாய் என்ற விலையில் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய ஹூண்டாய், ரெனால்ட் மற்றும் எம்ஜி போன்ற பல்வேறு நிறுவனங்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

போக்கோ சி-3 ஸ்மார்ட்போன் விலை குறைப்பு :

naveen santhakumar

ரெட்மி நோட்-5 G ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் :

Shobika

பறக்கும் காரை தயாரிக்கும் Hyundai மற்றும் Uber நிறுவனங்கள்

Admin