ஜோதிடம்

2020 ஆம் ஆண்டு கன்னி ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும் .உணவு விஷயத்திலும் கவனத்துடன் இருந்தால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நடைபெறுவதன் மூலம் மனநிறைவு உண்டாகும் .

குடும்பம் பொருளாதார நிலை

கன்னி ராசியை பொறுத்தவரை இந்த ஆண்டு வீடு மனை வாங்க கூடிய யோகம் உண்டாகும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். நீங்கள் இருக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி நிச்சயம் கிட்டும்.பிள்ளைகள் வழியில் சிறிது மன கவலை உண்டாகும் உற்றார் உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் உதவ வேண்டிய நேரத்தில் உதவி செய்வார்கள்.

தொழில் வியாபாரம்

ALSO READ  பொள்ளாச்சி வழக்கு; "200 பெண்களின் அலறல் ஓயவில்லை"...கமலஹாசன் கருத்து! 

தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபங்களை அடையமுடியும். தொழிலை முன்னேற்றுவதற்கு நவீன கருவிகள் வாங்க அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும்.மறைமுக எதிர்ப்புகளும் போட்டி பொறாமைகள் விலகும் .கூட்டாளி மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.

உத்தியோகம்

கன்னி ராசி காரர்கள் இல் பணிபுரிபவர்களை பொறுத்தவரை நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும் .நீங்கள் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள் அதற்கான பாராட்டுதல்களையும் பெறுவீர்கள்.
வெளிநாடு சென்று பணி புரியும் ஆசை உள்ளவர்களின் விருப்பம் நிறைவேறும்.

ALSO READ  கொரோனா குமாராக வருகிறார் 'சுமார் மூஞ்சி குமார்'... 

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும் போதிய நீர் வரத்து உண்டாகும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் யாவும் கைகூடி மகிழ்ச்சியினை உண்டாக்கும். பூர்வீக சொத்துக்களால் சிறு பிரச்சினை ஏற்படும் என்பதால் உற்றார் உறவினர்களுடன் சிறிது பொறுமையுடன் பேசுவது நல்லது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சொல்லின் செல்வர் சோ.சத்தியசீலன் காலமானார்..!

naveen santhakumar

9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

naveen santhakumar

மீனுக்காக வீசிய வலையில் சிக்கிய மான்; மீனவர்கள் அதிர்ச்சி…!

naveen santhakumar