சினிமா

த்ரிஷா நடிப்பை காப்பியடித்தேனா? – நடிகை சமந்தா விளக்கம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தெலுங்கு 96 ரீமேக் படத்தில் நடித்து வரும் நடிகை சமந்தா த்ரிஷா நடிப்போடு தன்னை ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.

2018ம் ஆண்டு தமிழில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘96’. இந்த படம் தற்போது தெலுங்கில் ‘ஜானு’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் எங்கேயும் எப்போதும் சர்வானந்தும், த்ரிஷா கதாபாத்திரத்தில் நடிகை சமந்தாவும் நடித்துள்ளனர். அண்மையில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.

ALSO READ  நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

இதில் பலர் ஜானு கேரக்டரில் த்ரிஷாவையும், சமந்தாவையும் ஒப்பிட்டு கருத்து தெரிவித்தனர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகை சமந்தா, 96 படத்தின் திரிஷாவின் நடிப்பை நாங்கள் காப்பி அடிக்க விரும்பவில்லை என்றும், அது நன்றாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படத்தின் கதை இன்னும் அதிகமான மக்களை சென்று சேரவேண்டும் என்பதால் தான் இப்படத்தை எடுத்தோம்” என குறிப்பிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முதன்முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் அனுஷ்கா…

naveen santhakumar

தாறுமாறாக வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்:

naveen santhakumar

நடனம் பயிற்சியின் போது வழுக்கி விழுந்த நடிகை லட்சுமி மேனன்… 

naveen santhakumar