சினிமா

மீண்டும் அந்த பிரபலத்துடன் இணையும் சிம்ரன் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அந்தாதூன்’.2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த ஹிந்தி படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதினையும் வென்றது. 

இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் இதன் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இறுதியில், தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார். இதில் ஆயுஷ்மான் குரானா வேடத்தில் பிரசாந்த் நடிக்கிறார். பிற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

ALSO READ  அடடே!!!!!!!அந்த நடிகர் கூட…. பிரியா பவானிசங்கர் ஜோடி சேர்ந்திருக்காங்களா?????

இந்த படத்தில் இருந்து இயக்குனர் மோகன் ராஜா விலக பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜே ஜே பிரட்ரிக் இயக்க இருக்கிறார்.இந்நிலையில் இந்தியில் தபு நடித்த வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க இப்போது சிம்ரன் நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் பிரசாந்துடன் ஜோடியாக நடித்த அவர் திரைப்படங்கள் அபார வெற்றியினை பெற்றது என்று குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘அண்ணாத்த’ யாக களமிறங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி..

Admin

ராதாரவியை எதிர்த்துப் போட்டியிடும் சின்மயி

Admin

மருத்துவருடன் பிரபுதேவா லிவ் இன் ரிலேஷன்ஷிப்…..இவரை தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறாரா????

naveen santhakumar