சினிமா

பட்டாஸ் படத்திற்காக “ஜிகிடி கில்லாடி”யாக மாறிய அனிருத்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு பட்டாஸ் படத்தின் மூன்றாவது பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கும் படம் “பட்டாஸ்” . இந்த படத்தின் நடிகைகள் சினேகா, மெஹரின் ஆகியோர் தனுசுக்கு ஜோடியாக நடித்துள்ளனர். பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருக்கும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

ALSO READ  முதன் முறையாக நடிகரை கெளரவித்த துபாய் அரசு!

ஏற்கனவே இசையமைப்பாளர் விவேக்-மெர்வின் இசையில் “சில் ப்ரோ” மற்றும் “வீரத்தமிழன் டா” ஆகிய பாடல்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு பட்டாஸ் படத்தின் மூன்றாவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இதுவரை வெளியான மூன்று பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். “ஜிகிடி கில்லாடி” எனத் தொடங்கும் இப்பாடல் இந்த ஆண்டு பொங்கலுக்கு அனைத்து இடங்களிலும் ஒலிக்கும் என விவேக் தெரிவித்துள்ளார். தங்கமகன் படத்திற்குப் பிறகு 4 ஆண்டுகளாக இணையாமல் இருந்த தனுஷ்-அனிருத் கூட்டணி மீண்டும் இப்பாடல் வழியாக இணைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மகத்-பிராச்சியின் திருமண புகைப்படங்கள் இதோ

Admin

நம் செயல்களே சமூகத்தில் நம் மீது மரியாதையை கூட்டும்; நடிகர் அஜித் அறிக்கை !

News Editor

உதயநிதி ஸ்டாலினுடன் நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன்!  

News Editor