சினிமா

பட்டா கத்தி சர்ச்சை….விளக்கமளித்த விஜய்சேதுபதி…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழின் முன்னணி நாயகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் சேதுபதி நேற்று (ஜனவரி 16) தனது 42வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பிறந்த நாள் கேக்கினை விஜய் சேதுபதி பட்டாக் கத்தியால் வெட்டுவது போன்ற புகைப்படம் நேற்று வைரலானது.

இதில் இயக்குநர் பொன்ராம் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர். இந்நிலையில் இந்தப் புகைப்படம் தற்போது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. பலரும் விஜய் சேதுபதியின் இந்த செயலை கண்டித்து வரும் நிலையில் இது குறித்து விஜய் சேதுபதி விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அதில்,”எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி.  இதனை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அதில் பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் வெட்டியிருப்பேன். தற்போது பொன்ராம் சார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன். அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும்.

ALSO READ  மீண்டும் நடைமுறைக்கு வந்த H-1B விசா திட்டம்; ஜோ பைடன் அதிரடி!

ஆகையால், அந்தப் படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடும்போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கினை வெட்டினேன். இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது. இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தளபதி 65 படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை…படக்குழு கொடுத்த அப்டேட் !

News Editor

அதுல்யாவின் இந்த படங்களுக்கு அள்ளும் லைக்ஸ்

News Editor

அண்ணாத்த பட  லுக்கில் ஸ்டைலாக தோன்றும்  ரஜினி..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!

News Editor