சினிமா

வெளியாகியது “RRR” படத்தின் அப்டேட் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாகுபலி’ படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் s.s.ராஜமௌலி இயக்கி வரும் படம் “RRR” என்று அழைக்கப்படும் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது.

தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து சுமார் 400 கோடியில் உருவாகும் இப்படத்தில் பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன், ஆலியா பட் மற்றும் தமிழ் நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பலரும் எதிர்பார்க்கும் இந்தப் படமானது, இந்த வருட ஜனவரி மாதம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. 

ஆனால் கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு பணிகள், தற்போது மீண்டும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆகையால் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் பிரம்மாண்ட சண்டைக் காட்சி ஒன்றை ஹைதராபாத்தில் படமாக்கினார்கள். அதனைத் தொடர்ந்து சில முக்கிய காட்சிகளைப் படமாக்கி வந்தது படக்குழு. 

ALSO READ  திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி முடிவு.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி “RRR” படம் குறித்து அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நேற்று முதல் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

#ramcharn #ssrajamouli #rajamouli #ntr #tamilmovie #telugumovie #tamilthisai #RRR #bahubali


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அருண் விஜய் -ஹரி  கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு அடுத்தமாதம் தொடங்குகிறது.

News Editor

“தனுஷ் என் குடும்பத்திற்கு மிக பெரிய உதவியை செய்துள்ளார்”; ரோபோ ஷங்கர் நெகிழ்ச்சி..!

News Editor

“என்னால் காத்திருக்க முடியவில்லை” தளபதி 65 குறித்து பூஜா ஹெக்டே ட்வீட் !

News Editor