சினிமா

‘கபடதாரி’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் நடிகர் சிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் படம் “கபடதாரி”. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நந்திதா நடித்துள்ளார். அதனையடுத்து படத்த்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், ஜெயா பிரகாஷ், சதிஷ் உள்ளிட்டோர்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சைமன் இசையமைக்கும் இப்படத்தினை தனஞ்சயன் தயாரித்துள்ளார்.

கடந்த ஆண்டே படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பு தடைபட்டுப்போனது. அதனையடுத்து படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து விரைவாக படப்பிடிப்பு  நடத்தப்பட்டு செப்டம்பர் 29 ஆம் தேதி  நிறைவு செய்யப்பட்டது. பின்னர் படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முழுவீச்சுடன் நிறைவு செய்துள்ளது படக்குழு.

இந்நிலையில் திரையரங்குகளில்  100 சதவீத பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளதால் “கபடதாரி” படத்தினை திரையரங்கில் வெளியிட தீவிரம் காட்டி வந்த படக்குழு. தற்போது படத்தின் வெளியிட்டு தேதியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில்,”கபடதாரி திரைப்படம் வரும் ஜனவரி 28 ஆம் தேதி தைப்பூசத்தன்று திரையரங்கில் வெளியாகும் என்றும் மேலும் கந்தனுக்கு அரோகரா” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ALSO READ  சசிகுமாரின் "பகைவனுக்கு அருள்வாய்" திரைப்படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

#Tamilcinema #Tamilthisai #sibiraj #nanthitha #kapadadaari #Tamilmovie


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் குறித்து ட்வீட் செய்த செல்வராகவன் !

News Editor

கதாநாயகியாக அறிமுகமாகும் கூக் வித் கோமாளி புகழ் பவித்ரா !

News Editor

“வலிமை” படத்தின் இறுதி சண்டைக்காட்சி; கார்த்திகேயா வெளியிட்ட அப்டேட் !

News Editor