சினிமா

சிம்புவின் கதையில் நடிக்கிறாரா “விஜய்”

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

“கோலமாவு கோகிலா” படத்தின் மூலம் தமிழ் சிமிவாவில் இயக்குநராக  அறிமுகமானார் நெல்சன். நயன்தாரா, யோகிபாபு நடிப்பில் வெளியான இத்திரைப்படம்  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.  ஆனால் இயக்குநர் நெல்சன் முதலில் சிம்பு நடித்த வேட்டை மன்னன் படத்தில் தான் அறிமுகமாகி இருக்க வேண்டும்.

கடந்த 2011ல்  ‘வேட்டை மன்னன்’ படத்தின் டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த டீசரில் நடிகர் சிம்பு துப்பாக்கியுடன் பேசும் டயலாக் அன்று ரசிகரகளால் பெரிதும் பேசப்பட்டது, ஆனால் படம் இன்றுவரை வெளியாகவில்லை.


இந்நிலையிதான் தற்போது இயக்குநர் நெல்சன் சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’ என்ற படத்தினை இயக்கி வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. அதனையடுத்து நடிகர் விஜயின் அடுத்த படத்தினை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. விஜய் 65 திரைப்படம் காமடி கலந்த கமர்சியல் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

ALSO READ  டெல்லியில் ஆட்சி அமைக்கப்போவது யார்?… இன்று வாக்கு எண்ணிக்கை…

விஜய் 65 பட அறிவிப்புடன் வெளிவந்த வீடியோ பின்னணியில் துப்பாக்கி வந்திருந்தது. இந்நிலையில், சிம்பு  நடித்து வெளியாகாமல் இருக்கும் ‘வேட்டை மன்னன்’ படத்தின் டீசரில் துப்பாக்கி இருந்தது . ஆகையால் நெல்சன் இயக்கவிருக்கும் விஜய் 65 படத்தின் கதை ‘வேட்டை மன்னன்’ படத்தின் கதையாக இருக்க கூடும் என தகவல் வெளியாகியள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகை அதுல்யாவின் பிறந்தநாள் புகைப்படங்கள்..எவ்ளோ அழகு.

News Editor

நடிகர் “ரஜினி” மருத்துவமனையில் அனுமதி..!

News Editor

சிகிக்சை முடிந்து இன்று வீடு திரும்புகிறார் கமல்ஹாசன் !

News Editor