சமீபத்தில் திருமணம் செய்த நடிகர் யோகிபாபுவிற்கு நடிகர் தனுஷ் திருமண பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடியனாக திகழ்பவர் நடிகர் யோகிபாபு. அவரின் வித்தியாசமான ஹேர்ஸ்டைல், உடல்வாகும் அனைத்து மக்களையும் எளிதில் கவருகின்றன.
தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய் , அஜித் என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்த யோகிபாபு தற்போது முதன்முறையாக நடிகர் தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் யோகிபாபுவிற்கும் மஞ்சு பார்கவி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து கர்ணன் படப்பிடிப்பில் பங்குபெற்ற நடிகர் யோகிபாபு விற்கு நடிகை தனுஷ் தங்கச் செயின் ஒன்றை பரிசாக வழங்கி அசத்தியுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எளிமையாக நடந்த யோகிபாபு திருமணத்தை தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சி மார்ச் மாதம் சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.