இந்தியா

வங்க கடலில் அம்பான் புயல்: எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எச்சரிக்கை..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share



சென்னை:-

வங்க கடலில் உருவாகும் ‘அம்பான்’ புயலால் (Cyclone Amphan) இன்று (மே 16) முதல் ஒரு வாரத்துக்கு தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் (Indian Meteorological Department) அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை இன்று அந்தமானில் துவங்குகிறது. இதன் துவக்கமாக வங்க கடலில் தெற்கு மத்திய பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாகிறது. இந்த புயலால் அடுத்த ஐந்து நாட்களுக்கு வங்க கடலின் மத்திய பகுதி தெற்கு பகுதியில் மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.

ALSO READ  டெல்லியில் ஒன்றிய அரசு ஊழியர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை : மாநில அரசு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

ஆனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஐந்து நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும். அதே வேளையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான தென்காசி, கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மட்டும் மழைக்கான வாய்ப்புள்ளது. வட மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் (3°C) வெயில் கூடும்’ என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த புயலுக்கான பெயரை தாய்லாந்து வழங்கியுள்ளது.

ALSO READ  அம்பன் சூப்பர் புயலுக்கு பிறகு ஒடிசா தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து கிடக்கும் கனரக வாகனங்கள்..

அதே வேளையில் எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வானிலை ஆய்வு மொயம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வருமான வரியை தவறாமல் ஒழுங்காக செலுத்துபவர்களா நீங்கள்??? அப்போ இந்த ஜாக்பாட் உங்களுக்குத்தான்:

naveen santhakumar

ATM பரிவர்த்தனை கட்டணம் உயருகிறது..!!

Shobika

பெங்களூரு போலீஸ் கமிஷனராக பண்ட் நியமனம்; தலைவணங்கிய முன்னாள் ஆணையர் பாஸ்கர் ராவ்… 

naveen santhakumar