இந்தியா

ஒற்றை வார்த்தையால் ஆத்திரமடைந்து மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவன்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லக்ஷமிபூர்கேரி:-

கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியின் மூக்கை கணவன் கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்ஷ்மிபூர்கேரி மாவட்டம் முதியா கிராமத்தை சேர்ந்தவர் சரோஜினி தேவி (34). இவரது கணவர் மூல்சந்த். கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 6 மாதகாலமாக சரோஜினி தேவி தனது பெற்றோர் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை கிராம பஞ்சாயத்தினர் இருவரையும் சமாதனப்படுத்தி சேர்ந்து வாழ அறிவுறுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனை அடுத்து நேற்று இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. கணவர் மூல்சந்த் மனைவி சரோஜாதேவியின் நடத்தை மீது கேள்வி எழுப்பியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த சரோஜினி தேவி ‘நான் மறுபடியும் பெற்றொர் வீட்டுக்கு போய்விடுவேன்’ என மிரட்டியுள்ளார். இதனால் கோபமான மூல்சந்த் தனது மனைவின் மூக்கை கடித்து துப்பியுள்ளார். இதில் காயமடைந்த சரோஜினி தேவி அலறித்துடித்துள்ளார். 

ALSO READ  Work From Home.. 70 லட்சம் பெண்கள் கர்ப்பம்.. என்னடா நடக்குது?....

அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் சரோஜினி தேவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து கணவர் மூல்சந்த் மீது சட்டப்பிரிவு 326-ன் கீழ் (தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்தல்) வழக்குப்பதிவு செய்து அவரை நீம்கவுன் (Neemgaon) போலீசார் கைது செய்துள்ளனர். ஊரடங்கு சமயத்தில் நடந்த கணவன்-மனைவி சண்டையில் மனைவியின் மூக்கை கணவன் கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ALSO READ  ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி !

இது குடும்ப வன்முறைகளுக்கு உள்ளாகும் பெண்கள் 181, 1091, 122 ஆகிய எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரக்‌ஷா பந்தன் தினத்தில் சகோதரிகளின் தியாகம்- நெகிழ்ச்சி சம்பவம் ..!

naveen santhakumar

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 44 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிப்பு

News Editor

மாதம் 20 லட்சம் கொரோனா பரிசோதனை கருவிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய மத்திய அரசு முடிவு….

naveen santhakumar