இந்தியா

விவாகரத்து பெற்ற மனைவிக்கு எப்போதிலிருந்து ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும்?????நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விவாகரத்து தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா, ஆர்.சுபாஷ் ரெட்டி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரித்தது. அதில் விவாகரத்து செய்யப்படும் மனைவிக்கு ஜீவனாம்சம் அளிப்பது தொடர்பாக நீதிபதிகள் உத்தரவு ஒன்றினை  பிறப்பித்துள்ளனர். 

இதுகுறித்து நீதிபதிகள் தெரிவித்ததாவது;”இந்து திருமண சட்டத்தில் கணவரிடம் இருந்து விவாகரத்தான மனைவிக்கு எப்போதிலிருந்து ஜீவனாம்சம் வழங்க வேண்டும்???? என்பது குறித்து சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. எனினும், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு செய்த நாளில் இருந்தே ஜீவனாம்சம் பெற முன்னாள் மனைவிக்கு உரிமை உண்டு.

முறைப்படி ஜீவனாம்சம் பெறும்வரை இடைக்கால ஜீவனாம்சம் கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை முடிவடைய சில ஆண்டுகள் ஆக வாய்ப்பு உள்ளது. எனவே, விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது முதலே ஜீவனாம்சம் பெற முதல் மனைவி உரிமை பெறுவதுதான் சரியாக இருக்கும். மேலும், நீதிமன்றத்தில் வாதாட விவாகரத்து பெறும் மனைவிக்கு நிதி நெருக்கடி ஒரு தடையாக இருக்கக் கூடாது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.


Share
ALSO READ  ஆயுள் தண்டனை கைதி பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு :
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திரையுலகில் டிரெண்டாகும் Real Man Challenge …! அசத்தும் திரைப் பிரபலங்கள்….

naveen santhakumar

மது பிரியர்களுக்கு ஷாக்…தடுப்பூசி போட்டவர்களுக்கே இனி சரக்கு….

Shobika

அதிகம் சாப்பிடுவதாக கூறி…… 2 வயது சிறுவனை கொடுமைப்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது:

naveen santhakumar