இந்தியா

இயற்கை விவசாயி வெற்றி பெற்ற கதை…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என்றார் காந்தியடிகள். ஆனால் இயற்கையின் சூழ்நிலை மாறுபட்டால் விவசாயிகள் தங்கள் விலைப்பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் பரிதவித்து வரும் வேளையில் எந்தவித இடைத்தரகரும் இல்லாமல் நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஒருவர் சாதித்து வருகிறார்.

மக்கள் என்னிடம் வளர்ந்த இயற்கையான பொருட்களை வீட்டிற்கு எடுத்து செல்வதால் எதுவும் வீணாகவில்லை.

வழக்கத்தை விட 20% லாபம் கிடைப்பதாகவும் மகிழ்ச்சி பொங்க தெரிவிக்கிறார் இயற்கை விவசாயி பகவத் தெரிவிக்கிறார்.

நாசிக் நகரில் விவசாயிகளால் தொடங்கப்பட்ட பண்ணையில் வாரத்தில் 2-3 நாட்கள் 200 க்கும் மேற்பட்ட விவசாயிகளின் ஒத்துழைப்புடன் “வசுந்தரா செந்திரியா ஷெட்மல் சம்படக் ஷெட்கரி காட்” என்ற பெயரில் நடக்கும் சந்தையில் தன் பொருட்களை விற்பனை செய்கிறார்.

2016 ஆம் ஆண்டு அம்மாநில அரசுடன் இணைந்து வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை நிறுவனம் இயற்கை விவசாயத்தில் பல விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தது.

ALSO READ  புதிய வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு ! 

அதில் பகவத் கலந்து கொண்டார். ஆனால் அவர் தன் விளை பொருட்களை முதலில் நகர்ப்புறங்களில் விற்க விரும்பியுள்ளார்.

அந்த சமயத்தில் அவர்களின் குழுவுக்கு வழிகாட்ட சரியான நபரைத் தேடியபோது, பகவத் ஓய்வுபெற்ற ராணுவ வீரரான ஜோசப் பிண்டோவை சந்தித்தார்.

அவரின் உதவியுடன் 2017ம் ஆண்டு ஜூஹு நகரின் பூங்காவில் முதல் கடையை அமைத்திருக்கிறார்.

இவர்களின் விவசாய சந்தையில் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள ஒரு வாட்ஸ்அப் குழுவை பகவத் உருவாக்கியுள்ளார். அதில் பல சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்படுகிறது.

ALSO READ  சர்தார்தம் பவனை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..!

மேலும் வார சந்தைக்கு ஒரு நாள் முன்னதாக, பகவத் தான் எடுத்துச் செல்லும் பொருட்களின் படங்களை வாட்ஸ்அப் குழுவில்அனுப்புகிறார்.

இவர்களது சந்தையில் எந்த இடைத்தரகரும் இல்லை. மேலும் நகரப் பகுதிகளில் இயற்கை காய்கறிகளுக்கு அதிக தேவை இருப்பதால் முடிந்தவரை நியாயமான விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.

வாடிக்கையாளர்களும் இவர்களின் தரத்திற்கேற்ப நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். கடினமாக உழைத்து, வாடிக்கையாளரை கவர்ந்து அவர்களுக்கு இயற்கை பொருட்களை வழங்கும் விவசாயிகள் பெரும்பாலும் நியாயமான விலையைப் பெறுவதில்லை என்ற கூற்றை பகவத் உடைத்தெறிந்து மற்ற விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக உள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

лучшие Букмекерские Конторы Рейтинг Букмекеров Топ Бк 2024 Онлайн Ставки На Спор

Shobika

Букмекерские Конторы Без Паспорта И Нелегальные Бк Без Цупис Для Ставок На Спор

Shobika

9 கோடி விவசாயிகளுக்கு 2000 ரூபாய் உதவித்தொகையை பிரதமர் மோடி வழங்குகிறார்:

naveen santhakumar